ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Top Gun Maverick திரைப்படத்தை இந்தியாவில் வெளியிட்ட வயகாம் 18!

Top Gun Maverick திரைப்படத்தை இந்தியாவில் வெளியிட்ட வயகாம் 18!

டாப் கன் மாவெரிக்

டாப் கன் மாவெரிக்

Top Gun Maverick திரையிடப்பட்டபோது பார்வையாளர்கள் 6 நிமிடம் எழுந்து நின்று கைதட்டி வாழ்த்தினார்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  Top Gun Maverick திரைப்படத்தை இந்தியாவில் Viacom18 Studios நிறுவனம் திரையரங்குகளில் வெளியிட்டுள்ளது.

  கேன்ஸ் திரைவிழாவில் Top Gun Maverick திரைப்பட திரையிடலில் Tom Cruise-க்கு கௌரவ Palme d’Or விருது வழங்கப்பட்டது. அங்கு Top Gun Maverick திரையிடப்பட்டபோது பார்வையாளர்கள் 6 நிமிடம் எழுந்து நின்று கைதட்டி வாழ்த்தினார்கள்.

  Paramount Pictures தயாரிப்பில் உருவான Top Gun Maverick திரைப்படத்தை இந்தியாவில் Viacom18 Studios நிறுவனம் மே 27 அன்று திரையரங்குகளில் வெளியிட்டது. கடற்படையின் சிறந்த விமானிகளில் ஒருவராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்த பிறகு, பீட் "மேவரிக்" மிட்செல் (டாம் குரூஸ்), ஒரு தைரியமான சோதனை பைலட் பணியை மேற்கொள்கிறார். அப்போது அவரை தொடரும் சிக்கல்களை துணிந்து எதிர்கொள்கிறார். அவர் TOPGUN பட்டதாரிகளின் ஒரு பிரிவினருக்குப் பயிற்சியளிக்கும் போது, எந்த உயிருள்ள விமானியும் இதுவரை கண்டிராத ஒரு சிறப்புப் பணிக்காக, அவருடைய இறந்துபோன நண்பனின் மகன் “Rooster” என்றழைக்கப்படும் லெப்டினன்ட் பிராட்லி பிராட்ஷா (மைல்ஸ் டெல்லர்) மற்றும் “Goose” என்றழைக்கபடும் Radar Intercept அதிகாரி Lt. நிக் பிராட்ஷாவை சந்திக்கிறார்.

  நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சின்னத்திரையில் டீலா நோ டீலா ரிஷி!

  நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் மேவரிக், தனது கடந்த காலத்தின் துயரங்களை எதிர்கொண்டு, தனது சொந்த பயங்களை கடந்து இந்த பணியை மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தில் பங்கேற்ற அனைவரும் பெரும் தியாகத்தைக் தர வேண்டிய சூழ்நிலைகளையும் சந்திக்கின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஜோசப் கோசின்ஸ்கி இயக்கியுள்ள இந்தப் படத்தில், டாம் க்ரூஸ், மைல்ஸ் டெல்லர், ஜெனிபர் கோனெல்லி, ஜோன் ஹாம், க்லென் பாவெல், லீவிஸ் புல்மென், சார்லஸ் பார்னெல், பாஷீர் சலஹுதீன், மோனிகா பார்பரோ, ஜே எல்லீஸ், டானி ராமிரெஸ், க்ரெக் டார்சான் டேவிஸ், எட் ஹாரிஸ் மற்றும் வால் கில்மர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Shalini C
  First published:

  Tags: Hollywood