முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெற்றிமாறனின் விடுதலையுடன் மோதும் சிம்புவின் பத்து தல!

வெற்றிமாறனின் விடுதலையுடன் மோதும் சிம்புவின் பத்து தல!

விடுதலை மற்றும் பத்து தல

விடுதலை மற்றும் பத்து தல

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் ’விடுதலை’ முதல் பாகம் மற்றும் சிலம்பரசன் நடித்திருக்கும் ’பத்து தல’ ஒரே நாளில் மோத உள்ளன.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் சிலம்பரசன் கன்னடத்தில் வெளியாகி வெற்றியடைந்த முஃப்டி என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்த வருகிறார். அதில் அவருடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கும் அந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் படத்தை மார்ச் 30 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். அதற்கான வேலைகளிலும் பட குழுவினர் மும்முறமாக இறங்கியுள்ளனர். அதில் முதல் கட்டமாக படத்தின் முதல் பாடலை சமீபத்தில் வெளியிட்டனர். அந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது.

சிம்புவின் மாநாடு படம் போல பத்து தல திரைப்படமும் வெற்றியடையும் எனப்படக் குழுவினர் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் அதே வாரம் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியாகவுள்ளது. இந்தப் படக்குழுவினரும் வெளியீட்டுக்கான வேலைகளை தொடங்கியுள்ளனர். மேலும் இளையராஜா இசையில் தனுஷ் பாடிய பாடலை வெளியிட்டு தங்கள் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளனர்.

சிம்புவின் பத்து தல சோலோவாக களமிறங்கி வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விடுதலை வெற்றிமாறன் படம் என்பதால் அதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உருவாகும். அது பத்து தல படத்திற்கு சிறிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று சினிமா துறையில் கூறுகின்றனர்.

பத்து தல, விடுதலை படங்களை தவிர, தெலுங்கு நடிகர் நானி மற்றும் தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் Pan Indian திரைப்படமாக உருவாகியுள்ள 'தசரா' படமும் அதே சமயத்தில் வெளியாகிறது.

புஷ்பா, கே.ஜி.எஃப் படங்கள் போல் ஒருவேலை தசரா படமும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றால் மூன்று படங்களுக்கு மத்தியில் பெரும் போட்டி ஏற்படும் என்று சினிமா துறையினர் கருதுகின்றனர். அப்படி போட்டி இருந்தால் மூன்று படக்குழுவினர் எதிர்பார்க்கும் வசூல் அவர்களுக்கு கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Simbhu, Actor Soori, Director vetrimaran