• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வெற்றிமாறனின் விடுதலை படத்தின் வியாபாரம் தொடங்கியது...!

வெற்றிமாறனின் விடுதலை படத்தின் வியாபாரம் தொடங்கியது...!

விடுதலை ஃபர்ஸ்ட் லுக்

விடுதலை ஃபர்ஸ்ட் லுக்

வெற்றிமாறனின் படங்களுக்கு தமிழகம் தாண்டி செல்வாக்கு இருப்பதால் விடுதலையின் மொத்த இந்தியாவுக்கான சேட்டிலைட், டிஜிட்டல் உரிமையை B4U மோஷன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சிறந்த படத்துக்கான விருதை நேற்று துணை ஜனாதிபதி கையால் வாங்கினார் வெற்றிமாறன். இன்று வெற்றிமாறன் என்பது தமிழகம் அறிந்த பெயரல்ல, இந்தியா அறிந்த இயக்குனரின் பெயர்.

விசாரணை படம் சர்வதேச அளவில் கவனம் பெற்று, விருதுகளும் வாங்கிய போது வெற்றிமாறனை அனைவரும் கவனிக்கத் தொடாங்கினர். வடசென்னை, அசுரன் படங்கள் அவரது பெயரை இந்திய அளவில் பலமாக முன் வைத்தன. இன்று அவரது படம் வெளியானால், அதைப் பார்க்க தமிழகத்தில் எத்தனை பேர் தயாராக இருக்கிறார்களோ, அதே எண்ணிக்கையில் தமிழகத்துக்கு வெளியேயும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது அடுத்த வெளியீடு விடுதலை.

விசாரணை, அசுரன் படங்களைப் போல விடுதலையையும் இலக்கியத்திலிருந்து எடுத்திருக்கிறார் வெற்றிமாறன். ஜெயமோகன் எழுதிய கதையின் அடிப்படையில் இந்தப் படம் தயாராகி வருகிறது. படத்தின் திரைக்கதையையும் ஜெயமோகனே எழுதியுள்ளார். விடுதலையில் போலீசான சூரியும், கைதியாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். படத்தின் கதை நாயகன் சூரிதான். வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி வருகிறார்.

Also read... உலகம் முழுவதும் 90 கோடி வசூலித்த டாக்டர் படம் - சிவகார்த்திகேயனின் வளர்ச்சிப்பாதை!

எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்போடெயின்மெண்டும், வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரிக்கின்றன. முதல்முறையாக இளையராஜா வெற்றிமாறனின் படத்துக்கு இசையமைக்கிறார். வெற்றிமாறனின் ஆஸ்தான கேமராமேன் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ராமர் எடிட்டிங்கை கவனிக்கிறார். சண்டைப் பயிற்சி பீட்டர் ஹெய்ன்.

வெற்றிமாறனின் படங்களுக்கு தமிழகம் தாண்டி செல்வாக்கு இருப்பதால் விடுதலையின் மொத்த இந்தியாவுக்கான சேட்டிலைட், டிஜிட்டல் உரிமையை B4U மோஷன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. பெரும் தொகைக்கு இந்த உரிமைகள் விற்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

விடுதலையைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இது சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி எடுக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: