Home /News /entertainment /

2 பாகங்களாக வெளிவருகிறது வெற்றி மாறனின் ‘விடுதலை’… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

2 பாகங்களாக வெளிவருகிறது வெற்றி மாறனின் ‘விடுதலை’… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

விடுதலை

விடுதலை

விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் முதலில் சிறப்பு தோற்றத்தில் வரும் வகையில் எழுதப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு முழு நீளமாக வரும் வகையில் மாற்றினார் வெற்றிமாறன்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது

    வெற்றிமாறனின் விடுதலை படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர்  இணைந்து நடித்து வருகின்றனர். அந்தப் படத்தின் படத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் முதலில் சிறப்பு தோற்றத்தில் வரும் வகையில் எழுதப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு முழு நீளமாக வரும் வகையில் மாற்றினார் வெற்றிமாறன். இதனால் படப்பிடிப்பு அதிக நாட்கள் எடுத்துக்கொண்டது. இதனால் விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடவுள்ளனர்.

    பிரபாஸ் படத்தில் இணைகிறாரா சூர்யா? புதிய தகவலால் ரசிகர்கள் உற்சாகம்…

    விடுதலை திரைப்படம் 2 பாகங்களாக வெளியாகுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெற்றி மாறனின் பிறந்த நாளான இன்று வெளியாகியுள்ளது.



    விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். மேலும் விரைவில் விடுதலை படம் திரைக்கு வருகிறது எனவும் கூறியுள்ளனர்.

    ‘கேப்டன்’ படம் எல்லோருக்கும் பிடிக்கும் – நடிகர் ஆர்யா நம்பிக்கை

    விடுதலை படத்தில் முதன்மை கதாபாத்திரம் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, சூரி மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.  ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு விடுதலை திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இளையராஜா படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனம் விடுதலை படத்தை தயாரித்து வருகிறது
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Soori, Actor Vijay Sethupathi, Director vetrimaran

    அடுத்த செய்தி