வாடிவாசல் தொடங்குவது எப்போது? வெப் சீரிஸாக வருகிறதா வடசென்னை 2 - வெற்றிமாறன் பதில்!

வட சென்னை படத்தின் 2-ம் பாகத்தை வெப் சீரிஸாக எடுக்கலாமா என யோசிக்கிறேன் - வெற்றிமாறன்

வாடிவாசல் தொடங்குவது எப்போது? வெப் சீரிஸாக வருகிறதா வடசென்னை 2 - வெற்றிமாறன் பதில்!
சூர்யா - வெற்றிமாறன்
  • Share this:
‘வடசென்னை 2’ படம் எடுக்க இன்னும் சிறிது காலமாகும் என்றும், ‘அருவா’ படத்துக்குப் பின்னர் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் வெற்றிமாறன் தகவல் அளித்துள்ளார்.

வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் கடைசியாக வெளியான படம் அசுரன். ஆனால் அசுரன் படம் வெளிவருவதற்கு முன்பாகவே வடசென்னை படத்தின் 2-ம் பாகம் எப்போது வரும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் இதனிடையே சூரி நாயகனாக நடிக்கும் படத்தையும், சூர்யாவை நாயகனாக வைத்து வாடிவாசல் என்ற படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாகவும் அறிவிப்புகள் வெளியாகின.

இந்நிலையில் வட சென்னை 2, வாடிவாசல் பற்றி ஒரு பேட்டியில் தகவல் தெரிவித்திருக்கும் வெற்றிமாறன், “வடசென்னை 2 படம் எடுக்க இன்னும் சில காலமாகும். அதை வெப் சீரிஸாக எடுக்கலாமா என யோசிக்கிறேன். ஆனால் அது குறித்த இறுதி முடிவை இன்னும் எடுக்கவில்லை. ஊடரங்கு தொடங்குவதற்கு முன்னர் சூரி நடிக்கும் படத்தை இயக்கி வந்தேன். அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க இருக்கிறேன். ஹரி- சூர்யா கூட்டணியில் உருவாகும் ‘அருவா’ படத்துக்கு பின்னர் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும்” என்றார்.First published: May 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading