ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாடிவாசல் படத்தின் கதை குறித்து வெற்றிமாறன் வெளியிட்ட புதிய தகவல்… சூர்யா ரசிகர்கள் உற்சாகம்

வாடிவாசல் படத்தின் கதை குறித்து வெற்றிமாறன் வெளியிட்ட புதிய தகவல்… சூர்யா ரசிகர்கள் உற்சாகம்

வெற்றிமாறன் - சூர்யா

வெற்றிமாறன் - சூர்யா

சூர்யா தற்போது பாலா இயக்கும் வணங்கான், சிறுத்தை சிவா இயக்கும் தனது 42ஆவது படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    வாடிவாசல் படத்தின் கதை குறித்து இயக்குனர் வெற்றிமாறன் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.  இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார். கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

    வாடிவாசல் படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்திற்காக சூர்யா காளைகளுடன் பயிற்சி எடுக்கும் வீடியோ காட்சி வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இதற்கிடையே, வெற்றிமாறன் தனது விடுதலை படத்தில் பிஸியாகி விட்டார்.

    ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தின் ‘க்ளிம்ஸ்’ வீடியோ வெளியானது…

    விடுதலை திரைப்படம் 2 பாகங்களாக எடுக்கப்படுகிறது. இதில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த இடைவெளியில் சூர்யா தற்போது பாலா இயக்கும் வணங்கான், சிறுத்தை சிவா இயக்கும் தனது 42ஆவது படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

    இந்தப் படங்களை முடித்துக் கொண்டு வாடிவாசல் படப்பிடிப்பில் சூர்யா இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, வெற்றிமாறன் பேட்டைக் காளி என்ற இணைய தொடரை தயாரித்துள்ளார். இதன் கதையும், வாடிவாசல் படத்தின் கதையும் ஒன்றுதானா என்ற சலசலப்பு ஏற்பட்டது.

    விறுவிறுப்பாக நடைபெறும் ‘துணிவு’ படத்தின் போஸ்ட் புரொடக்சன்… எச்.வினோத் ஃபோட்டோ வைரல்…

    இதுகுறித்து பேட்டி அளித்துள்ள வெற்றி மாறன், ‘பேட்டைக் காளி சம காலத்தில் நடக்கும் கதை. வாடிவாசல் 1960-களில் நடைபெறும் கதை. அந்த கால கட்டத்தில் நடக்கும் அரசியல் கதையாக வாடிவாசல் உருவாகும்.’ என்று தெரிவித்துள்ளார்.

    ' isDesktop="true" id="827381" youtubeid="5rKwUho_hUQ" category="cinema">

    வடசென்னை, அசுரன் ஆகிய வெற்றிமாறனின் படங்கள் பீரியட் படங்களாக உருவாக்கப்பட்டு மிகப்பெரும் வரவேற்பை பெற்றன. அந்த வகையில் வாடிவாசலும் புதிய ரிக்கார்டுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Suriya