முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கோட்டா நீலிமாவின் நாவலை தெலுங்கில் படமாக்கும் வெற்றிமாறன்?

கோட்டா நீலிமாவின் நாவலை தெலுங்கில் படமாக்கும் வெற்றிமாறன்?

இயக்குநர் வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறன்

ஜுனியர் என்டிஆர் நடிப்பில் ஒரு ஆக்ஷன் படத்தை எடுக்கவும் வெற்றிமாறன் திட்டமிட்டிருப்பதாக செய்திகளில் குறிப்பிட்டுள்ளனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

வெற்றிமாறன் அடுத்த வருடம் தெலுங்கில் படம் இயக்குகிறார் என தெலுங்குப்பட உலகில் பலமாக பேசப்படுகிறது. தெலுங்கின் முன்னணி இணையதளங்கள் மற்றும் அச்சு ஊடகங்களிலும் இந்த செய்தி வெளியாகியுள்ளது. 

ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் படங்கள் வெற்றிமாறனை இந்தியாவின் முன்னணி இயக்குனராக்கியது. அவரது படத்தை தமிழகத்தை தாண்டியும் எதிர்பார்க்கிறவர்கள் அதிகம் இருக்கிறார்கள். தற்போது சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை படத்தை எடுத்து வருகிறவர், அடுத்து சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்குகிறார். இதற்கே அவர் ஒரு வருடம் எடுத்துக் கொள்வார் என தெரிகிறது.

இந்நிலையில், அடுத்த வருடம் வெற்றிமாறன் தெலுங்குப் படத்தை இயக்குகிறார் என செய்தி வெளியிட்டுள்ளன தெலுங்கு மீடியாக்கள். வெங்கடேஷ், ராம் சரண் நடிக்கும் மல்டி ஸ்டாரர் படமாக இது இருக்கும், அத்துடன் ஜுனியர் என்டிஆர் நடிப்பில் ஒரு ஆக்ஷன் படத்தை எடுக்கவும் வெற்றிமாறன் திட்டமிட்டிருப்பதாக செய்திகளில் குறிப்பிட்டுள்ளனர்.

வாடிவாசலுக்குப் பிறகு கோட்டா நீலிமாவின் ஷுஸ் ஆஃப் தி டெட் நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளார் வெற்றிமாறன். இந்த நாவல் ஆந்திரா பின்னணியில் எழுதப்பட்டது. கடனால் தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் மரணத்துக்கு, அவரது தம்பி நியாயம் கேட்கும் கதை. இந்தப் போராட்டம் எப்படி ஒரு அதிகாரமிக்க அரசியல் தலைவரின் வாழ்க்கையை அஸ்தமிக்கிறது என்பதையும் இந்த நாவல் சொல்கிறது.

Also read... மீண்டும் சர்ச்சை இயக்குனர்களின் படத்தில் சமந்தா...!

இந்தக் கதையை வெங்கடேஷ், ராம் சரணை வைத்து எடுக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார் என்பது தெலுங்கு ஊடகங்களின் யூகமாக உள்ளது. இதே கதையை விஜய்யை வைத்து வெற்றிமாறன் எடுக்க திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள் இங்குள்ளவர்கள்

யாருக்கு அதிர்ஷ்டமிருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

First published:

Tags: Director vetrimaran