ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

முன்னணி தளத்திற்கு வெப் சிரீஸ் இயக்கும் வெற்றிமாறன் - உறுதிப்படுத்திய ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்!

முன்னணி தளத்திற்கு வெப் சிரீஸ் இயக்கும் வெற்றிமாறன் - உறுதிப்படுத்திய ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்!

பி.சி.ஸ்ரீராம் - வெற்றிமாறன்

பி.சி.ஸ்ரீராம் - வெற்றிமாறன்

கமல்ஹாசனுடன் ஒரு படம், விஜய்யின் ஒரு படம், இயக்குனர் அமீருடன் இணைந்து ஒரு வெப் சீரிஸ் என வெற்றிமாறனின் வேலை பட்டியல் நீள்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் வெப் சீரிஸில் பணிபுரிவதாக அறிவித்துள்ளார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.

வெற்றிமாறன் தமிழ் இயக்குநர்களில் முக்கியமானவர். அவரது படங்கள் ஒவ்வொன்றும் தலைசிறந்த படைப்பாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அவர் பெரும்பாலும் தனுஷுடன் பணியாற்றினாலும், மற்ற முன்னணி ஹீரோக்களுடனும் அவர் பணியாற்ற வேண்டுமென ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தற்போது விஜய் சேதுபதி மற்றும் சூரி இணைந்து நடித்துள்ள விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கும் விடுதலை திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதைத்தொடர்ந்து, கலைப்புலி.S.தாணு தயாரிப்பில், நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்குகிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகவிருக்கிறது.

தவிர, கமல்ஹாசனுடன் ஒரு படம், விஜய்யின் ஒரு படம், இயக்குனர் அமீருடன் இணைந்து ஒரு வெப் சீரிஸ் என வெற்றிமாறனின் வேலை பட்டியல் நீள்கிறது. இந்நிலையில் அவரின் புதிய வெப் சீரிஸில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளதாக ஒளிப்பதிவாளர் PC.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கே.ஜி.எப் நடிகர் கிருஷ்ணா ஜி ராவ் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

இது குறித்து பதிவிட்டுள்ள அவர், “எனது அடுத்த ப்ராஜெக்ட் இயக்குனர் வெற்றிமாறனுடன். அவர் இயக்கி உருவாக்கும் இந்த வெப் சீரிஸ் ZEE 5 தளத்திற்காக தயாராகிறது. முன்னணி கதாபாத்திரங்கள் மற்றும் இதர விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Director vetrimaran