முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெற்றிமாறனின் விடுதலை பாடல் & டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

வெற்றிமாறனின் விடுதலை பாடல் & டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

விடுதலை

விடுதலை

படத்தின் நீளம் கருதி இதனை 2 பாகங்களாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வரும் 8-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான வெற்றிமாறன், நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து விடுதலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது. அதில் முதல் பாகம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

ஜெயமோகன் எழுதியுள்ள துணைவன் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு விடுதலை திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது. படத்தின் நீளம் கருதி இதனை 2 பாகங்களாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர். ஈரோடு, சத்தியமங்கலம் போன்ற அடர்ந்த காட்டுப் பகுதியில் செட் அமைக்கப்பட்டு, இதன படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி உடன் பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்.


இந்நிலையில் விடுதலை படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வரும் 8-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விஜய் சேதுபதி தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Soori, Actor Vijay Sethupathi, Director vetrimaran, Vetrimaran