Home /News /entertainment /

Viduthalai: வெற்றிமாறனின் விடுதலை படம் குறித்த சூப்பர் அப்டேட்!

Viduthalai: வெற்றிமாறனின் விடுதலை படம் குறித்த சூப்பர் அப்டேட்!

விடுதலை

விடுதலை

சூரி - விஜய் சேதுபதி இணைந்து நடித்த வரும் விடுதலை திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட நிறுவனம் வெளியிடுகிறது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

வெற்றிமாறனின் விடுதலை படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர்  இணைந்து நடித்து வருகின்றனர். அந்தப் படத்தின் படத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் முதலில் சிறப்பு தோற்றத்தில் வரும் வகையில் எழுதப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு முழு நீளமாக வரும் வகையில் மாற்றினார் வெற்றிமாறன். இதனால் படப்பிடிப்பு அதிக நாட்கள் எடுத்துக்கொண்டது. இதனால் விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடவுள்ளனர்.

வெவ்வேறு கண்டத்திலிருந்து வருகிறோம், நாங்கள் சேருமிடம் எப்போதும் தமிழ்நாடு தான்!



இந்த நிலையில் விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். மேலும் விரைவில் விடுதலை படம் திரைக்கு வருகிறது எனவும் கூறியுள்ளனர்.

 
Published by:Shalini C
First published:

Tags: Actor Soori, Actor Vijay Sethupathi, Director vetrimaran

அடுத்த செய்தி