Home /News /entertainment /

வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தை 2 பாகங்களாக வெளியிட முடிவு…

வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தை 2 பாகங்களாக வெளியிட முடிவு…

விடுதலை படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதி - வெற்றி மாறன்

விடுதலை படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதி - வெற்றி மாறன்

Viduthalai Movie : படம் குறித்து முன்பு பேட்டி அளித்திருந்த வெற்றி மாறன், படத்தின் ஹீரோ சூரி என்றும், கதையின் ஹீரோ விஜய் சேதுபதி என்றும் கூறியிருந்தார்.

    வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்து வரும் விடுதலை திரைப்படத்தை 2 பாகங்களாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஜெயமோகன் எழுதியுள்ள துணைவன் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு விடுதலை திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. படத்தின் நீளம் கருதி இதனை 2 பாகங்களாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    மேலும், கதை முழுமையாக சினிமா ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்று வெற்றி மாறன் விரும்புவதாகவும், இதன் காரணமாகத்தான் 2 பாகங்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சிவகார்த்திகேயனின் 22வது பட டைட்டில் வெளியானது… வரவேற்பை பெறும் அறிவிப்பு வீடியோ

    விடுதலை படத்தை கடந்த ஓராண்டுக்கும் மேலாக வெற்றி மாறன் இயக்கி வருகிறார். ஈரோடு, சத்தியமங்கலம் போன்ற அடர்ந்த காட்டுப் பகுதியில் செட் அமைக்கப்பட்டு, மருத்துவ முதலுதவிகளுடன் விடுதலை படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

    வழக்கமாக காமெடி கேரக்டரில் நடிக்கும் சூரி, இந்த படத்தில் போலீசாக நடித்திருக்கிறார். கைதி கேரக்டரில் விஜய் சேதுபதி படத்தில் இடம்பெற்றுள்ளார்.

    Maaveeran Title Announcement | எதிர்த்து நின்றான் மாவீரன்... வெளியானது சிவகார்த்திகேயனின் டைட்டில் வீடியோ!

    விடுதலை படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரே ஷெடூலில் படத்தை முடித்து விட வெற்றி மாறன் திட்டமிட்டுள்ளார்.

    இந்தப்படம் குறித்து முன்பு பேட்டி அளித்திருந்த வெற்றி மாறன், படத்தின் ஹீரோ சூரி என்றும், கதையின் ஹீரோ விஜய் சேதுபதி என்றும் கூறியிருந்தார்.

    இருவருக்கும் படத்தில் சம அளவு காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வடசென்னை, அசுரன் உள்ளிட்ட வெற்றிப் பட வரிசையில் விடுதலை படமும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த படத்தை முடித்துக் கொண்டு சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தில் வெற்றிமாறன் இணையவுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay Sethupathi, Director vetrimaran

    அடுத்த செய்தி