Home /News /entertainment /

வெற்றிமாறனின் விடுதலை படத்திற்காக சிறுமலையில் அமைக்கப்படும் கிராமம்… முழுவீச்சில் ஷூட்டிங்

வெற்றிமாறனின் விடுதலை படத்திற்காக சிறுமலையில் அமைக்கப்படும் கிராமம்… முழுவீச்சில் ஷூட்டிங்

விடுதலை படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதி - வெற்றி மாறன்

விடுதலை படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதி - வெற்றி மாறன்

முதன் முறையாக வெற்றி மாறன் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்து வரும் விடுதலை படத்திற்காக, திண்டுக்கல் அருகே சிறுமலையில் பிரமாண்ட கிராம செட் அமைக்கப்படுகிறது. மிகுந்த சிரமங்களுக்கு இடையே ஷூட்டிங் விறுவிறுப்புடன் நடந்து வருவதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

வடசென்னை, அசுரன் படங்களின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் வெற்றி மாறன் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி, கவுதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.

விடுதலை படத்தின் முக்கிய காட்சிகள் சத்தியமங்கலம் வனப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. வழக்கமாக காமெடி கேரக்டர்களுக்கு பெயர்போன சூரி, இந்த படத்தில் சீரியஸான காவலராக நடித்துள்ளார். விஜய் சேதுபதியும் படத்தில் இடம்பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதன்முறையாக விஜய் சேதுபதியும், வெற்றிமாறனும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

இதையும் படிங்க - 20 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித் படத்தில் இடம்பெறும் மகாநதி சங்கர்

விடுதலை படத்தையொட்டி திண்டுக்கல் அருகே சிறுமலையில் கிராம செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட திரைக்கலைஞர்கள் தங்கி படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுமலை பகுதியில் 50 நாட்களுக்கு தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவு பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க - 13 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய் படத்தில் இணையும் பிரபுதேவா…

படப்பிடிப்பின்போது விஷ பாம்புகள், காட்டு மாடுகள், காட்டு நாய், அட்டைப்பூச்சிகளின் தாக்குதல்களை படக்குழுவினர் எதிர் கொண்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கையாக மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ உதவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. விடுதலை படத்தின் சண்டைக் காட்சிகளை பீட்டர் ஹெய்ன் வடிவமைக்கிறார். இதில் விஜய் சேதுபதி டூப் போடாமல் நடித்துக் கொடுத்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

விடுதலை படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். முதன் முறையாக வெற்றி மாறன் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Musthak
First published:

Tags: Actor Soori, Actor Vijay Sethupathi, Director vetrimaran

அடுத்த செய்தி