வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தின் சூட்டிங் ஸ்பாட் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வெற்றிமாறனின் விடுதலை படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். அந்தப் படத்தின் படத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் முதலில் சிறப்பு தோற்றத்தில் வரும் வகையில் எழுதப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு முழு நீளமாக வரும் வகையில் மாற்றினார் வெற்றிமாறன்.
இதனால் படப்பிடிப்பு அதிக நாட்கள் எடுத்துக்கொண்டது. இதனால் விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடவுள்ளனர்.
விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் விடுதலை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படுவது போன்று சீன்கள் இடம்பெற்றுள்ளன.
Stills from d sets of #VetriMaaran's #Viduthalai, jaw-dropping action scenes progressing @ kodaikanal @VijaySethuOffl @ilaiyaraaja @elredkumar @Udhaystalin @BhavaniSre @rsinfotainment @RedGiantMovies_ @PeterHeinOffl @mani_rsinfo @VelrajR @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/JIbumNHyCg
— Actor Soori (@sooriofficial) September 10, 2022
சண்டைக் காட்சி இயக்குனர் பீட்டர் ஹெய்ன் உடன் வெற்றிமாறன் பட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். மேலும் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் இடம்பெறும் சீன்களும் புதிய புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளது.
விடுதலை படத்தின் பணிகளை முடித்துக் கொண்டு வெற்றி மாறன் விரைவில் வாடிவாசல் படப்பிடிப்பல் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Soori, Actor Vijay Sethupathi, Director vetrimaran