வன விலங்குகளின் தாக்குதலை எதிர்கொண்டு வெற்றி மாறனின் விடுதலை படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முன்னெச்சரிக்கையாக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ உதவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வடசென்னை, அசுரன் படங்களின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் வெற்றி மாறன் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி, கவுதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.
விடுதலை படத்தின் முக்கிய காட்சிகள் சத்தியமங்கலம் வனப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. வழக்கமாக காமெடி கேரக்டர்களுக்கு பெயர்போன சூரி, இந்த படத்தில் சீரியஸான காவலராக நடித்துள்ளார். விஜய் சேதுபதியும் படத்தில் இடம்பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதன்முறையாக விஜய் சேதுபதியும், வெற்றிமாறனும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.
இதையும் படிங்க - ‘ரஜினி படங்களில் பெண்களை தப்பா காட்டிருக்காங்க’ – ஆர்.ஜே. பாலாஜி பேச்சால் சர்ச்சை
விடுதலை படத்தையொட்டி திண்டுக்கல் அருகே சிறுமலையில் கிராம செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட திரைக்கலைஞர்கள் தங்கி படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுமலை பகுதியில் 50 நாட்களுக்கு தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவு பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க - விக்ரம் படத்தில் சூர்யா கேரக்டரை விவரித்த கமல்… பார்ட் 3 உருவாகுமா?
படப்பிடிப்பின்போது விஷ பாம்புகள், காட்டு மாடுகள், காட்டு நாய், அட்டைப்பூச்சிகளின் தாக்குதல்களை படக்குழுவினர் எதிர் கொண்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கையாக மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ உதவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. விடுதலை படத்தின் சண்டைக் காட்சிகளை பீட்டர் ஹெய்ன் வடிவமைக்கிறார். இதில் விஜய் சேதுபதி டூப் போடாமல் நடித்துக் கொடுத்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க - தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் இன்னொரு நடிகை யார்?
விடுதலை படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். முதன் முறையாக வெற்றி மாறன் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை முடித்துக் கொண்டு சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை முழுவீச்சில் இயக்கவுள்ளார் வெற்றி மாறன். அதற்கு முன்பாக பாலா இயக்கும் படத்தின் ஷூட்டிங்கை முடிக்கவுள்ளார் நடிகர் சூர்யா.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.