ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தமிழ்நாடா? தமிழகமா? - வெற்றிமாறனின் பதில் இதுதான்!

தமிழ்நாடா? தமிழகமா? - வெற்றிமாறனின் பதில் இதுதான்!

வெற்றிமாறன்

வெற்றிமாறன்

இதனைத் தொடர்ந்து பிரபலங்களிடம் கேட்கப்படும் முதல் கேள்வி தமிழ்நாடா தமிழகமா என்பதாகத்தான் இருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் ஏற்பாடுகளை செய்தோரைக் கெளரவிக்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ''தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றிற்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால் தமிழ்நாடு அதை வேண்டாம் என்கிறது என்றார்.

மேலும் தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். பொய் பரப்புரையை நாம் முறியடிக்க வேண்டும் என்றும் எது உண்மை என்று மக்களுக்கு சொல்ல வேண்டும் என்றும் பேசினார். ஆளுநரின் பேச்சு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ட்விட்டரில் ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிடத் தொடங்கினர். இதனால் தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது.

இந்த நிலையில் ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கமல்ஹாசன் பேசியதாவது, ''தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்வதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே தமிழ்நாடு என்று பெயர் வந்துள்ளது. இதை மாற்ற சொல்வதற்கு அவர் யார்? அவர் பெயர் ரவி என்பதை புவி என மாற்றிக்கொள்வாரா ?'' என்றார். மேலும் சீமான் உள்ளிட்ட பிரபலங்கள் ஆளுநருக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். மற்றொரு பக்கம் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், குஷ்பு போன்ற பாஜகவினர் ஆளுநரின் கருத்தை ஆதரித்து பேசினர்.

இதனைத் தொடர்ந்து பிரபலங்களிடம் கேட்கப்படும் முதல் கேள்வி தமிழ்நாடா தமிழகமா என்பதாகத்தான் இருந்துவருகிறது. இதே கேள்வியை இயக்குநர் வெற்றிமாறன் செய்தியாளர்கள் கேட்டபோது சற்றும் யோசிக்காமல் தமிழ்நாடுதான் என பதிலளித்தார். இதனையடுத்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்துவருகிறது.

First published:

Tags: Director vetrimaran, RN Ravi, Tamilnadu