Vetrimaaran: வெற்றிமாறன் - சூரி திரைப்படம் அட்டகாச அப்டேட்!

இயக்குநர் வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து வரும் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்றோடு முடிவடைந்துள்ளது.

  • Share this:
    இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து வரும் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்றோடு முடிவடைந்துள்ளது.

    இயக்குனர் வெற்றிமாறன் தற்போது நகைச்சுவை நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே சமீபத்தில் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது. அதோடு அதில் நடித்த தனுஷ், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.

    வெற்றிமாறன் தற்போது தனது கையில் பல படங்களுடன் பிஸியாக இருக்கிறார். இதில் சூரி நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

    இந்தப் படம் எழுத்தாளர் ஜெயமோகனின் கதையை அடிப்படையாகக் கொண்டாலும், படத்தின் தலைப்பைப் பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்தப் படத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு செங்கல்பட்டில் நேற்று நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தைத் தவிர, சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்குவது குறிப்பிடத்தக்கது.




    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: