வெற்றிமாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுத, அவரது முன்னாள் உதவி இயக்குனரும் எதிர்நீச்சல், காக்கிசட்டை, கொடி, பட்டாஸ் படங்களின் இயக்குனருமான துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘அதிகாரம்’ என்ற படம் தயாராகிறது.
இந்தப் படத்தை வெற்றிமாறனின் கிராஸ்ரூட் நிறுவனத்துடன் இணைந்து பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். இவர் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் தயாரிப்பாளர். மூன்றாவது முறையாக வெற்றிமாறனின் படத்தை தயாரிக்க வேண்டும் என பல வருடங்களாக காத்திருந்தவருக்கு, வெற்றிமாறன் கதை எழுதிய படத்தை தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதிகாரம் ஒரு ஆக்ஷன் திரைப்படம். லாரன்ஸ் இதில் நாயகனாக நடிக்கிறார். படத்தின் முக்கால்வாசி காட்சிகளை மலேசியாவிலும், பிற காட்சிகளை சென்னை, மும்பையிலும் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். படத்தின் கதைக்கும், நாயகன் கதாபாத்திரத்துக்கும் லாரன்ஸ் சரியாக இருப்பார் என
வெற்றிமாறன் தான் அவரை தேர்வு செய்திருக்கிறார்.
லாரன்ஸ் தற்போது
ருத்ரன் படத்தை இயக்கி நடித்து வருகிறார். வெற்றிமாறன் விடுதலை, வாடிவாசல் என இரு படங்களை இயக்குகிறார். லாரன்ஸ் தமிழ், தெலுங்கில் பிரபலம். அக்ஷய் குமாரை வைத்து
காஞ்சனா படத்தை இந்தியில் லட்சுமி என்ற பெயரில் இயக்கி அங்கும் பிரபலமானதால், அதிகாரத்தை பான் - இந்தியன் திரைப்படமாக உருவாக்குகின்றனர். அதாவது தமிழ், தெலுங்குடன் இந்தியிலும் அதிகாரத்தை வெளியிட உள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.