ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கைவிடப்பட்டதா வெற்றிமாறனின் முக்கியப் படம்?

கைவிடப்பட்டதா வெற்றிமாறனின் முக்கியப் படம்?

வெற்றிமாறன்

வெற்றிமாறன்

கிரியேட்டிவ் கருத்து வேறுபாடுகளால் 'அதிகாரம்' படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    இயக்குநர் வெற்றிமாறன் திரைக்கதையில் உருவாகவிருந்த அதிகாரம் படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் பல்வேறு படங்களை தனது கைகளில் வைத்துள்ளார். தற்போது இரண்டு பாகமான 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். இதன் முதல் பாகம் 2023 துவக்கத்திலும், இரண்டாம் பாகம் பாதியிலும் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.

    இதற்கிடையில், ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கும் 'அதிகாரம்' படத்தின் திரைக்கதையை வெற்றிமாறன் எழுதுவதாகவும், அதோடு இணை தயாரிப்பாளராக படத்தை தயாரிப்பதாகவும் கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது. இதனை வெற்றிமாறனின் உதவியாளராக இருந்த 'எதிர்நீச்சல்' மற்றும் 'காக்கி சட்டை' புகழ் துரை செந்தில் குமார் இயக்கவிருந்தார்.

    பூர்வீக கிராமத்திலுள்ள முன்னோர்கள் வீட்டுக்கு விசிட் செய்த கீர்த்தி சுரேஷ்!

    தற்போது கிரியேட்டிவ் கருத்து வேறுபாடுகளால் 'அதிகாரம்' படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாராவின் 81-வது படத்தை இயக்க துரை செந்தில் குமார் ஏற்கனவே சென்றுவிட்டார். இதற்கிடையில், லாரன்ஸ், 'சந்திரமுகி 2', 'ருத்ரன்' மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் பெயரிடப்படாத படம் உட்பட பல படங்களை கைவசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Director vetrimaran