இயக்குநர் வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பாக தயாரித்த இணையத் தொடர் பேட்டைக்காளி. ராஜ்குமார் எழுதி இயக்கிய இந்தத் தொடர் கடந்த வருடம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இது ஜல்லிக்கட்டு விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்தது.
இந்தத் தொடரில் கலையரசன், கிஷோர், வேல ராமமூர்த்தி, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதன் பாடல்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். 7 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி முதல், வாரம் ஓர் எபிசோட் என்ற கணக்கில் வெளியானது.
இந்தத் தொடரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் படுயதார்த்தமாக பதிவு செய்யப்படிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்தத் தொடரில் நடித்த காளி என்ற காளை மாடு மிகவும் கவனம் பெற்றது. இந்நிலையில் அந்த காளை உடல் நலக்குறைவால் மரணமடைந்தது.
இதனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் ராஜ்குமார், ''பேட்டைக்காளியில் நடித்த காளி நேற்று இரவு உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். பேட்டைக்காளி தொடரின் ரசிகர்கள் அவரது பதிவுக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Director vetrimaran