முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அசுரன் பட சர்ச்சை: சீமான் பொய் சொன்னாரா? வெற்றிமாறன் என்ன சொல்கிறார்?

அசுரன் பட சர்ச்சை: சீமான் பொய் சொன்னாரா? வெற்றிமாறன் என்ன சொல்கிறார்?

வெற்றிமாறன் - சீமான்

வெற்றிமாறன் - சீமான்

சீமான் பொய் கூறுவதாக ஒரு சிலர் சர்ச்சையாக்க, அவரது ஆதரவாளர்கள் வெற்றிமாறன் பேசிய வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள விடுதலை முதல் பாகத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கின்றன. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். இவர்களுடன் இயக்குநர் கௌதம் மேனன், சேத்தன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இளையராஜா இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. விடுதலை இசை வெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா, வெற்றிமாறன் தமிழின் மிக முக்கிய இயக்குநர் என்றும் 1500 படங்களுக்கு இசையமைத்த பின் இதனை கூறுவதாகவும் தெரிவித்திருந்தார்.

முன்னதாக ஆர்ஆர்ஆர் படம் தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த ராஜமௌலியிடம் நிச்சயம் பார்க்க வேண்டிய சிறந்த 5 படங்களைக் கூறுங்கள் என கேட்கப்பட்டது. அதற்கு 5 படங்களில் ஒன்றாக வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தையும் ராஜமௌலி குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் வெற்றிமாறனின் அசுரன் படத்தில் இடம்பெற்ற எள்ளுவய பூக்களையே பாடலை முதலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாடியதை கேட்டு தான் படத்தில் அந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டாக கூறப்படுகிறது. இதனை சீமான் ஒரு நேர்காணலில் பகிர்ந்து அந்தப் பாடலின் மெட்டையும் பாடிக்காட்டினார். சீமான் பொய் கூறுவதாக ஒரு சிலர் சர்ச்சையாக்க, அவரது ஆதரவாளர்கள் வெற்றிமாறன் பேசிய வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

அந்த வீடியோவில் பேசிய வெற்றிமாறன், அசுரன் பாடல்கள் குறித்து நானும் ஜி.வி.பிரகாஷும் பேசியபோது நாட்டுப்புற பாடல்கள் வடிவில் இந்தப் படத்தின் பாடல்கள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இளையாரஜா சாயலில் நான் பாடல்களை எதிர்பார்ப்பேன். அது தான் எனக்கு பிடிக்கும்.

அந்த நேரத்தில் ஒரு கல்லூரி விழாவில் சீமான் பாடல்கள் பாடியிருந்தார். அதனை நான் கேட்டேன். உடனே அந்தப் பாடல் சிறப்பாக இருப்பதாக ஜி.வி.பிரகாஷிடம் சொன்னேன். நானும் ஜி.வி.பிரகாஷும் சீமானை சந்தித்தோம். அவர் தன் பாட்டி பாடிய பாடல்தான் என்றார். பின்னர் சீமான் டியூன் பாடினார். அதனை வைத்து ஜீ.வி.பிரகாஷ் குமார் அந்தப் பாடலை உருவாக்கினார் என்றார்

First published:

Tags: Director vetrimaran, Seeman