ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெற்றிமாறனின் விடுதலை படப்பிடிப்பு நிறைவு!

வெற்றிமாறனின் விடுதலை படப்பிடிப்பு நிறைவு!

விடுதலை

விடுதலை

ஜெயமோகன் எழுதிய துணைவன் நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில், சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வெற்றிமாறனின் விடுதலை படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  தமிழ் இயக்குனர்களில் முக்கியமான ஒருவரான வெற்றி மாறன், தனது தனித்துவ படைப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். அடுத்ததாக 'விடுதலை' படத்தை இயக்குகிறார். ஜெயமோகன் எழுதிய துணைவன் நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில், சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது வெற்றி மாறன் 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்தப் படப்பிடிப்பு 2020-ல் தொடங்கியது. கதையின் விரிவாக்கம் காரணமாக, 'விடுதலை' இரண்டு பாகங்களாகத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டு, இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் செவ்வாய்கிழமையுடன் முடிவடைந்தது.

  இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும். இதையடுத்து தற்போது வெற்றி மாறன் 'விடுதலை' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் கவனம் செலுத்துகிறார். மேலும் படத்தின் முதல் பாகம் ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து நீண்ட நேரம் ரசிகர்களை காக்க வைக்க விரும்பாத வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தையும் விரைவில் வெளியிட முயற்சி செய்து வருகிறாராம்.

  கவர்ச்சியான கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் காஜல் அகர்வால்?

  இதற்கிடையில், சூர்யாவுடன் 'வாடிவாசல்' படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் வெற்றி. இதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. 'விடுதலை' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷனை முடித்துவிட்டு, அவர் 'வாடிவாசல்' படப்பிடிப்பைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்கள் ஒன்றிணைவதால் அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Director vetrimaran, Tamil Cinema