நடிகர் வேதம் நாகையா திடீர் மரணம் - அனுஷ்கா உருக்கமான இரங்கல்

நடிகர் நாகையாவுடன் அனுஷ்கா

நடிகர் நாகையா வயது முதிர்வு காரணமாக கடந்த சனிக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 77.

  • Share this:
    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தேசவரம் பேட்டாவைச் சேர்ந்தவர் நாகையா. கடந்த 2007-ம் ஆண்டு கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் அல்லு அர்ஜூன், அனுஷ்கா உள்ளிட்டோருடன் வேதம் படத்தில் ராமு என்ற கேரக்டரில் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நாகையா அந்தப் படத்துக்குப் பின்னர் வேதம் நாகையா என்று அழைக்கப்பட்டு வந்தார்.

    வேதம் படத்தைத் தொடர்ந்து ஸ்பைடர், நாகவள்ளி உள்ளிட்ட பல படங்களில் நடித்த நாகையா வயது முதிர்வு காரணமாக கடந்த சனிக்கிழமை என்று மரணமடைந்தார். அவரது குடும்பத்தினருக்கு தெலுங்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் நாகையாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அனுஷ்கா, “நல்ல ஆத்மா ஒன்று சொர்க்கத்திற்கு சென்றுவிட்டது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.



    தமிழில் வேதம் படம் தான் வானம் என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் நடிகர் சிம்பு, அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இத்திரைப்படமும் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
    Published by:Sheik Hanifah
    First published: