பிரபல தெலுங்கு நடிகர் கைகலா சத்யநாராயணா தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 87. அவரது மறைவு பிரபல தெலுங்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராம்சரண், நானி போன்ற பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
கடந்த 1959 ஆம் ஆண்டு வெளியான 'சிப்பாயி கூத்துரு' படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைத்த அனைத்து வேடங்களையும் சிறப்பாக செய்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார். இதுவரை 770க்கும் மேற்பட்ட படங்களில் சத்யநாராயணா நடித்துள்ளார். கடைசியாக மகேஷ் பாபுவின் 'மஹார்ஷி' படத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிக்க| பிரேக்கில் சிம்பு செய்யவிருக்கும் சிறப்பான சம்பவம்
தமிழில் 'பஞ்சதந்திரம்' படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக சஞ்சீவி ரெட்டி என்ற வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். இந்தப் படத்தில் கைகலா சத்யநாராயணா பேசிய 'சின்ன கல்லு, பெத்த லாபம்' என்ற வசனம் மிகப் பிரபலம். மேலும் 'பெரியார்' படத்தில் பெரியார் அப்பா வெங்கடப்ப நாயக்கராக தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தினார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிபட்டினம் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினார். இவர் தனது ராமா ஃபிலிம்ஸ் புரொக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பாக ஏராளமான படங்களை தயாரித்திருக்கிறார். கேஜிஎஃப் படங்களை தெலுங்கில் இவர் தான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor, Tamil News, Telugu