Home /News /entertainment /

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் ஐ.சி.யூ-வில் அனுமதி

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் ஐ.சி.யூ-வில் அனுமதி

லதா மங்கேஷ்கர்

லதா மங்கேஷ்கர்

‘சத்யா’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘வளையோசை’ பாடலை, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடினார் லதா மங்கேஷ்கர்.

    பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்தியாவின் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர், பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கிறார். இவர் 1929-ம் ஆண்டு, செப்டம்பர் 28-ம் தேதி, மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பிறந்தார். தந்தை பண்டிட் தீனாந்த் மங்கேஷ்கர் மராத்தி இசைக்கலைஞர், அம்மா குஜராத்தி. இந்தியாவின் மற்றொரு இனிய பாடகி ஆஹா போஸ்லே, லதாவின் சகோதரி தான்.

    1942 ஆம் ஆண்டு சினிமாவில் பாடத் தொடங்கிய லதா மங்கேஷ்கர், முதன் முதலாக “கிதி ஹசால்” என்ற மராத்தி பாடலைப் பாடினார். அதே ஆண்டில் அவருடைய தந்தையும் இறந்து விடவே, குடும்பம் வறுமையில் வாடியது. அந்த நேரத்தில் இசையமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர் “மஜ்பூர்” என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு அளித்தார். இது லதாவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    1955-ம் ஆண்டு திலீப் குமாரின் நடிப்பில் ‘உரன் கடோலா’ என்ற இந்திப் படம் வெளியானது. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த 9 பாடல்களையும், லதா மங்கேஷ்கரும், முகமது ரஃபியும் பாடியிருந்தார்கள். பின்னர் இந்தப் படம் ‘வான ரதம்’ என்ற டைட்டிலில் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது. இதில் ’எந்தன் கண்ணாளன்’ பாடலை கம்பதாசன் வரிகளில் பாடினார் லதா. பாடலுக்கு இசை நவ்ஷத். தொடர்ந்து சில தமிழ் படங்களில் பாடினார். ஆனால் அவையனைத்தும் நேரடி தமிழ் படங்கள் இல்லை. இந்தியில் இருந்து தமிழில் டப்பிங் செய்யப்பட்ட படங்களில் மட்டுமே பாடினார்.

    ஆனாலும் 1956-ம் ஆண்டிற்குப் பிறகு வேறெந்த தமிழ் படங்களிலும் பாடாமல் இருந்தார் லதா மங்கேஷ்கர். அவரை 1987-ம் ஆண்டு பிரபு நடித்த ‘ஆனந்த்’ என்ற படத்திற்காக மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தார் இளையராஜா. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஆராரோ ஆராரோ’ என்ற பாடலைப் பாடினார் லதா. ஆக, இது தான் அவர் நேரடியாகப் பாடிய முதல் தமிழ் பட பாடல்.

    அதன் பிறகு 1988-ல், இளையராஜா இசையில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான, ‘சத்யா’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘வளையோசை’ பாடலை, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடினார். இன்றளவும் இந்தப் பாடல் பலரின் ஃபேவரிட் லிஸ்டில் உள்ளது. அதன் பிறகும் இளையராஜா இசையில் ஓரிரு தமிழ் பாடல்களை பாடியுள்ளார்.



    நடிகை நிதி அகர்வாலுடன் லிவிங் டுகெதரில் சிம்பு? விரைவில் திருமணம்?

    இந்நிலையில் பாடகி லதா மங்கேஷ்கருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மும்பையிலுள்ள ப்ரேச் கேண்டி மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Lata mangeshkar

    அடுத்த செய்தி