கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் 10 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாடகி
லதா மங்கேஷ்கர் தொடர்ந்து ஐசியுவில் இருப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் அனுஷா சீனிவாசன் ஐயர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஜனவரி 9-ம் தேதி மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வாரம் முதல் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வருகிறார்.
"டாக்டர் பிரதித் சம்தானி மற்றும் அவரது அற்புதமான மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பு மற்றும் சிகிச்சையின் கீழ் லதா திதி தொடர்ந்து ஐசியுவில் இருக்கிறார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அனைவரும் பிரார்த்தனை செய்வோம்” என அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் செய்தித் தொடர்பாளர் அனுஷா.
புஷ்பா பட நடிகை பரிதாப மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி
லதா மகேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக வெளியான செய்திகள் தவறானவை, என்று அவர் முன்பே கூறியிருந்தார். “தவறான செய்திகள் பரப்பப்படுவதைப் பார்ப்பது கவலை அளிக்கிறது. லதா தீதியின் உடல்நிலை சீராக உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். திறமையான மருத்துவர்களின் சிகிச்சையில் தொடர்ந்து ஐசியூவில் இருக்கிறார். அவர் சீக்கிரம் வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்” என்று கூறியிருந்தார். அனுஷா சீனிவாசன் ஐயர்.
அதோடு 92 வயதான பாடகி தனது முதுமை காரணமாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக சிறிது நேரம் ஆகும் என்றும் அனுஷா தெரிவித்தார். இதற்கிடையே பாடகி லதா மங்கேஷ்கருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் பிரதித் சம்தானி, அவர் விரைவில் குணமடைவதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.