Home /News /entertainment /

மேடையில் பாடிக் கொண்டிருந்தபோதே சுருண்டு விழுந்து இறந்த பிரபல பாடகர் - அதிர்ச்சியில் திரையுலகினர்

மேடையில் பாடிக் கொண்டிருந்தபோதே சுருண்டு விழுந்து இறந்த பிரபல பாடகர் - அதிர்ச்சியில் திரையுலகினர்

பஷீர்

பஷீர்

கேரளாவின் வர்கலை பகுதியருகே எடவா என்ற இடத்தில் பிறந்தவர் பஷீர். ஜேசுதாஸ் மற்றும் ரபி ஆகியோரின் பாடல்களை கேட்டு தொடக்க காலத்தில் பயிற்சி பெற்று வந்தவர் பஷீர்.

  • News18
  • Last Updated :
    மேடையில் பாடிக்கொண்டு இருக்கும் போதே பிரபல பாடகர் எடவா பஷீர் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கேரளாவின் வர்கலை பகுதியருகே எடவா என்ற இடத்தில் பிறந்தவர் பஷீர். ஜேசுதாஸ் மற்றும் ரபி ஆகியோரின் பாடல்களை கேட்டு தொடக்க காலத்தில் பயிற்சி பெற்று வந்தவர் பஷீர்.

    பின்னணி பாடகரான எடவா பஷீர் மலையாளத்தில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் ஆழப்புழை அருகே உள்ள பத்திரபள்ளியில் ப்ளூ டைமண்ட்ஸ் என்கிற இசைக்குழுவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்துக்கான இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் எடவா பஷீரும் பங்கேற்றார்.

    அந்த நிகழ்ச்சியில் எடவா பஷீரும் பாடல்களை பாடினார். அப்போது ஜேசுதாஸ் பாடிய இந்திப் பாடல் ஒன்றை அவர் பாடியபோது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    Also read... கே.ஜி.எப் 2 வெற்றி - சம்பளத்தை உயர்த்திய நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி

    மறைந்த பாடகர் எடவா பஷீர், கேரள இசைக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். அவரது திடீர் மறைவு மலையாள திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போதே பாடகர் எடவா பஷீர் உயிழ்ந்துள்ள சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment

    அடுத்த செய்தி