• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மென்மையான குரலால் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த பாடகி ஆஷா போஸ்லே 88-வது பிறந்தநாள்!

மென்மையான குரலால் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த பாடகி ஆஷா போஸ்லே 88-வது பிறந்தநாள்!

ஆஷா போஸ்லே

ஆஷா போஸ்லே

1980-களில் இளையராஜா மூலம் தமிழ் சினிமாவிலும் ஆஷா போஸ்லேவின் குரல் ஒலித்தது.

  • Share this:
    பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே இன்று தனது 88-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 65 ஆண்டுகளுக்கும் மேலாக பின்னணி பாடி வருகிறார்.

    மகாராஷ்டிரத்தில் சாங்க்லி மாவட்டத்தில் கோர் என்ற கிராமத்தில் 1933-ம் ஆண்டு பிறந்தார் ஆஷா போஸ்லே. இவரது தந்தை ஒரு நடிகர். ஆனால் அவரது 9 வயதில் தந்தை காலமானார். குடும்பம் பம்பாயில் குடியேறியதும், இவரும் இவரது அக்கா லதா மங்கேஷ்கரும் திரைப்படங்களில் பாடினர்.

    1943-ல் முதன்முதலாக ‘சலா சலா நவ பாலா’ என்ற மராத்தி மொழிப் பாடலை ஆஷா தனியாகப் பாடினார். 1949-ல் ‘ராத் கீ ராணி’ படப் பாடல் மூலம் புகழ்பெறத் தொடங்கினார்.

    1952-ல் ‘சங்தில்’, அடுத்த ஆண்டு ‘பரிநீதா’ ஆகிய படப் பாடல்களாலும் ராஜ் கபூர் படத்தில் பாடிய ‘நன்ஹே முன்னே பச்சே’ என்ற பாடல் மூலமும் புகழ்பெற்றார். தொடர்ந்து ‘சி.ஐ.டி.’, ‘நயா தௌர்’ ஆகிய படங்களில் பாடிய பாடல்கள் வெற்றி பெற்றதில் பாலிவுட்டில் நிரந்தர இடமும் கிடைத்தது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    இதையடுத்து 1980-களில் இளையராஜா மூலம் தமிழ் சினிமாவிலும் ஆஷா போஸ்லேவின் குரல் ஒலித்தது. "செண்பகமே செண்பகமே தென் பொதிகைச் சந்தனமே" என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஆஷா போஸ்லேவுக்கு தமிழ் ரசிகர்களை சேர்த்தது. இதைத் தொடர்ந்து இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் பல பாடல்களை பாடினார்.

    குறிப்பாக மீரா படத்தில் இடம்பெற்ற ’ஓ பட்டர் ஃபிளை’ பாடலும், ஹேராம் படத்தில் ‘நீ பார்த்த பர்வைக்கொரு நன்றி’ பாடலும் ஆஷா போஸ்லேவுக்கு இன்னும் ரசிகர் பட்டாளத்தைக் கூட்டின. இந்தப் பாடல்கள் இன்றளவும் பலரின் ஃபேவரிட்டாக உள்ளன.



    1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 12,000-க்கும் மேற்பட்டப் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் ஆஷா போஸ்லே.

    சமையலில் ஆர்வம் உள்ள இவர், தங்களுக்கு விருப்பமான உணவைச் சமைத்துத் தரும்படி கேட்கும் பல திரையுலகப் பிரபலங்களுக்கு அன்போடு சமைத்துத் தருவாராம். துபாய், குவைத் ஆகிய இடங்களில் உணவகங்களை நடத்திவருகிறார்.

    இரண்டு முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது, பல ஃபிலிம்ஃபேர் விருதுகள், நைட்டிங்கேல் ஆஃப் ஆசியா, தாதா சாகேப் பால்கே விருது, பத்ம விபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: