ஏ.ஆர் ரஹ்மானுக்கு முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் அர்ஜுனன் காலமானார்!

எம்.கே.அர்ஜுனனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஏ.ஆர் ரஹ்மானுக்கு முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் அர்ஜுனன் காலமானார்!
இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன்
  • Share this:
பிரபல இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் காலமானார். அவருக்கு வயது 87.

1968-ம் ஆண்டு மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான எம்.கே.அர்ஜுனன் சுமார் 200 படங்களில் பணியாற்றி 500-க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமல்லாது மேடை நாடகங்களிலும் இசைப்பணியாற்றியுள்ளார் எம்.கே.அர்ஜுனன்.

இவருக்கு 2017-ம் ஆண்டு பயானகம் என்ற திரைப்படத்துக்காக கேரள அரசின் மாநில விருது வழங்கப்பட்டது. எம்.கே.அர்ஜுனன் இசையில் தான் முதன்முதலில் கே.ஜே.யேசுதாஸ் பாடல் பாடினார். அதேபோல் 1981-ம் ஆண்டு எம்.கே.அர்ஜுனன் இசையமைத்த ‘அடிமச்சங்களா’ என்ற மலையாளப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும் முதலில் கீ போர்டு வாசித்தார்.


தனக்கு முதல் வாய்ப்பு வழங்கியவர் என்பதால் எம்.கே.அர்ஜுனன் மீது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தனி மரியாதை உண்டு. எனவே 2017-ம் ஆண்டு நடைபெற்ற எம்.கே.அர்ஜுனனின் பிறந்தநாள் நிகழ்வில் அமெரிக்காவிலிருந்து வந்து கலந்துகொண்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

வயது மூப்பு காரணமாக இன்று கொச்சியில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்த எம்.கே.அர்ஜுனனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: பிரதமரின் வேண்டுகோளை ஏற்று விளக்கேற்றிய ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர், நடிகைகள்...!
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading