ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மூத்த நகைச்சுவை நடிகர் மரணம் - முதல்வர் இரங்கல்

மூத்த நகைச்சுவை நடிகர் மரணம் - முதல்வர் இரங்கல்

கொச்சு பிரேமன்

கொச்சு பிரேமன்

பிரேமனின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநிலங்களவைத் தலைவர் வி.டி.சதீசன், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பழம்பெரும் மலையாள நடிகர் கொச்சு பிரேமன் காலமானார். அனுபவம் வாய்ந்த மூத்த நடிகரான இவர், டிசம்பர் 3-ம் தேதி திருவனந்தபுரத்தில் காலமானார். அவருக்கு வயது 68. நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாடக கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கொச்சு பிரேமன், மஞ்சு வாரியர் மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த டில்லிவாலா ராஜகுமாரன் (1996) திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

சுமார் 250 படங்களில் நடித்துள்ள கொச்சு பிரேமனின் நகைச்சுவைகள் பல ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குரு (1997), தென்காசிப்பட்டணம் (2000), பாப்பி அப்பாச்சா (2010) மற்றும் லீலா (2016) உள்ளிட்ட படங்கள் பிரேமனின் நடிப்பில் வெளியாகின. கடைசியாக அவர் ஒரு பப்படவாடா பிரேமம் (2021) படத்தில் நடித்திருந்தார்.

விஜய் - லோகேஷ் கனகராஜின் தளபதி 67 பூஜையுடன் தொடக்கம்!

பிரேமனின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநிலங்களவைத் தலைவர் வி.டி.சதீசன், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Malayalam actor