பாகுபலி படத்துக்கு பின்னர் சாஹோ என்ற படத்தில் நடித்த பிரபாஸ், அதைத்தொடர்ந்து ராதா கிருஷ்ணா இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ என்ற படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை அடுத்து ‘மகாநடி’ படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளார். இது அவரது 21-வது படமாகும். அறிவியல் பின்னணியில் இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் கால் பதிக்கிறார் தீபிகா படுகோன்.
இந்நிலையில் இன்று இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் இந்தப் படத்தில் இணைந்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் கமல்ஹாசனை நாயகனாக வைத்து ‘அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ். மேலும் தெலுங்கு, இந்தி மலையாள மொழிப்படங்களையும் இயக்கி இருக்கும் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.