GN Rangarajan: பழம்பெரும் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்

ஜி.என்.ரங்கராஜன்

ரங்கராஜனுக்கு உதவும் வகையில் கமல் சம்பளம் வாங்காமல் நடித்த படம் தான் மகராசன்.

  • Share this:
    கமலின் கல்யாணராமன், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள் போன்ற சூப்பர்ஹிட் திரைப்படங்களை இயக்கிய ஜி.என்.ரங்கராஜன் இன்று காலை மூப்பு காரணமாக காலமானார்.

    கமலின் திரைவாழ்க்கையில் முக்கியமாக கருதப்படும் திரைப்படம் கல்யாணராமன். நீட்டிய பற்களுடன் தனது தோற்றத்தை மாற்றி கமல் நடித்திருந்தார். அவர் தனது தோற்றத்தை மாற்றி நடித்த ஆரம்பகால திரைப்படங்களில் கல்யாணராமன் முக்கியமானது. அதேபோல் மீண்டும் கோகிலா திரைப்படத்தில் சபலப்புத்தி கொண்ட குடும்பஸ்தனாக நடித்தார். கடல் மீன்களில் இரண்டு வேடங்கள். இவை மூன்றும் ஜி.என்.ரங்கராஜன் இயக்கிய படங்கள். ஒவ்வொரு படத்திலும் கமலை வித்தியாசமாக காட்டியிருப்பார். கமலுக்கும் அவர் மீது அதிக பற்று இருந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ரங்கராஜனுக்கு உதவும் வகையில் கமல் சம்பளம் வாங்காமல் நடித்த படம் தான் மகராசன். அந்த நேரத்தில் முதுகில் அடிபட்டு உட்கார முடியாத நிலையில் கமல் இருந்தார். அந்த சிரமத்திலும் மகராசன் படத்தில் நடித்தார். ஜி.என்.ரங்கராஜன் இயக்கிய கடைசிப்படம் அது. அவரே படத்தை தயாரிக்கவும் செய்தார்.
    ரங்கராஜனின் மகன் தான் நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாஹா படங்களை இயக்கிய ஜிஎன்ஆர் குமரவேலன். மறைந்த ஜி.என்.ரங்கராஜனுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: