• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Cinematographer Sivan: சந்தோஷ் சிவனின் தந்தை மூத்த ஒளிப்பதிவாளர் சிவன் மாரடைப்பால் மரணம்

Cinematographer Sivan: சந்தோஷ் சிவனின் தந்தை மூத்த ஒளிப்பதிவாளர் சிவன் மாரடைப்பால் மரணம்

சிவன்

சிவன்

புகைப்படக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கிய சிவன் ‘செம்மீன்’ திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்குள் நுழைந்தார்.

  • Share this:
    பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை சிவன் மாரடைப்பால் காலமானார்.

    தளபதி, ரோஜா, இருவர், துப்பாக்கி, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல முக்கிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சந்தோஷ் சிவன். இவரின் தந்தை சிவன், மலையாள திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளரான இவர், அபயம், யாகம், கொச்சு கொச்சு மோகங்கள் உள்ளிட்ட படங்களையும் மலையாளத்தில் இயக்கியுள்ளார்.

    புகைப்படக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கிய சிவன் ‘செம்மீன்’ திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்குள் நுழைந்தார். கேரள சினிமாவின் பிரபல புகைப்படக் கலைஞராக அறியப்பட்ட சிவன் இதுவரை மூன்று முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் நேற்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். சிவனுக்கு சந்தோஷ் சிவனுடன் சேர்த்து மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர்.

    சிவனின் மறைவையடுத்து அவரது குடும்பத்துக்கு திரையுலகினர் தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: