ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Dilip Kumar: பழம்பெரும் நடிகர் திலீப் குமார் காலமானார்

Dilip Kumar: பழம்பெரும் நடிகர் திலீப் குமார் காலமானார்

திலீப் குமார்

திலீப் குமார்

திலீப் குமார் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக நோய் முதல் நிமோனியா வரை பல நோய்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பழம் பெரும் நடிகர் திலீப் குமார் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 98.

பாலிவுட்டின் மூத்த நடிகர் திலீப் குமார் மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் காலமானார். அவர் கடந்த புதன்கிழமை மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரே மாதத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், இது இரண்டாவது முறையாகும்.

திலீப் குமார் முதலில் ஜூன் 6-ஆம் தேதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆக்ஸிஜன் உதவியுடன் உடல்நிலை சீராக்கப்பட்டது. அவரை மூத்த அரசியல்வாதி சரத் பவார் பார்த்த புகைப்படமும் வெளியானது. திலீப் குமாரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கைப்பிடியில், "வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளை நம்ப வேண்டாம். திலீப் குமாரின் உடல்நிலை சீராக இருக்கிறது. உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, அவர் 2-3 நாட்களில் வீட்டில் இருக்க வேண்டும்." எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் திலீப் குமார் ஜூன் 11-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திலீப் குமார் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக நோய் முதல் நிமோனியா வரை பல நோய்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, தனது 94-வது பிறந்தநாளை காய்ச்சல் மற்றும் கால் வீங்கியதால் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையிலேயே கொண்டாடினார். டிசம்பரில் 99-வது பிறந்தநாளை கொண்டாடவிருந்த நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு காலமானார். 50 வருடங்களுக்கும் மேலாக தனது மனைவி சைரா பானுவுடன் வசித்து வந்தார்.

திலீப் குமாரின் உண்மையான பெயர் யூசுப் கான். இவர் முகலாய இ-அசாம், தேவதாஸ், ராம் அவுர் ஷியாம், அந்தாஸ், மதுமதி மற்றும் கங்கா ஜமுனா உள்ளிட்ட இந்திய சினிமாவின் மிகச் சிறந்த ஐகானிக் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bollywood