நேற்று திருமணம்... இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்...!

நேற்று திருமணம்... இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்...!
நடிகர் திபாங்கர்
  • News18
  • Last Updated: January 17, 2020, 7:48 PM IST
  • Share this:
நீண்டகாலமாக லிவிங் டூ கெதர் உறவில் இருந்து சக நடிகையை 75 வயதில் திருமணம் செய்துகொண்ட பெங்காலி நடிகர் திபாங்கர் தே இன்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வங்கமொழி திரையுலகில் நீண்ட காலமாக இருக்கும் பிரபல நடிகர் திபாங்கர் தே மற்றும் நடிகை டோலோன் ராய் ஆகிய இருவரும் நேற்று திருமணம் செய்துகொண்டனர். 75 வயதான திபாங்கர் தே மற்றும் 49 வயதான டோலோன் ஆகிய இருவரும் திடீரென திருமணம் செய்துகொண்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீண்ட காலமாக இருவரும் லிவிங் டூ கெதர் உறவில் இருந்தாலும், இருவருமே அதனை மறுத்தது இல்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அவர்கள் திருமணம் செய்துகொண்டுள்ளனர். தற்போது வரை இருவருமே பிஸியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர்.


இந்த நிலையில், இன்று திடீரென திபாங்கர் தே மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அவருக்கு திருமணம் நடந்த நிலையில், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரின் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
First published: January 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்