காணாமல் போன பழம்பெரும் நடிகை தனது சொந்த மகனால் படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது திரையுலகம் மற்றும் தொலைக்காட்சி துறையினர் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
74 வயதான இந்தி நடிகை வீணா கபூர், 'மிட்டர் பியாரே நு ஹால் முரீடன் டா கெஹ்னா,' 'டல்: தி கேங்' மற்றும் 'பந்தன் பெரோன் கே' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். சொத்து தகராறால் அவரது மகன் சச்சின் வீணாவை கொன்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து நடிகை நிலு கோஹ்லி, மறைந்த நடிகை வீணா கபூரை நினைவுகூர்ந்து இன்ஸ்டகிராமில் ஒரு நீண்ட பதிவை எழுதினார். 74 வயதாகும் வீணாவை, அவரது மகன் சச்சின் கபூர் மற்றும் அவர்களது உதவியாளர் சோட்டு என்ற லாலுகுமார் மண்டலால் இணைந்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு நிலு அளித்த பேட்டியில், வீணாவின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்தார். “இந்தச் செய்தி எனக்கு மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது, வயிறு எரிகிறது, என்னால் சாப்பிட முடியவில்லை. என்னால் சிந்திக்க முடியவில்லை. எனக்கு நெருக்கமான ஒருவருக்கு இதுபோன்ற சம்பவம் நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை” என்றவர், இந்த வழக்கை கிரைம் ரோந்து என்ற க்ரைம் ஷோவுடன் ஒப்பிட்டு, இங்கு உண்மை கற்பனையை விட விசித்திரமானது என்று மறைமுகமாகக் கூறினார்.
இந்தி மீடியம், மன்மர்சியான், ஜோகி, குட்பை போன்ற பல படங்களில் பணியாற்றிய நிலு, வீணாவுக்கு இந்த மறைவுக்கு தகுதியானவர் இல்லை என்று குறிப்பிட்டார். கொலைக்கு காரணமான சொத்து தகராறு, அவர் வாழ்க்கையில் முக்கிய புள்ளியாக மாறியதாகவும் கூறினார்.
View this post on Instagram
உள்ளுக்குள்ள ஃபயரு, தெறிச்சு ஓடும் ஃபியரு... வெளியானது துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல்...
வீணா இறப்பதற்கு முந்தைய நாட்களில் தனது மகன் மீது பல புகார்களை அளித்துள்ளார். குடும்பத்தில் நிலவும் சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சச்சின் தனது தாயாரின் சொத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் கைது செய்யப்பட்டதை உறுதிசெய்த, மூத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் தத்தாத்ரயா, “சச்சின் ஜூஹூவில் இருந்தார். அவர் பிடிபட்டு விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்ட பிறகு, குற்றத்தை ஒப்புக்கொண்டார், அதன் பிறகு அவர் தனது உதவியாளர், மண்டலின் உதவியுடன் தாயாரின் உடலை அப்புறப்படுத்தியிருந்ததால், எங்களை மாதேரானுக்கு அழைத்துச் சென்றார்” என்றார்.
பேஸ்பால் பேட் மூலம் தாய் வீணாவை பலமுறை தலையில் தாக்கியுள்ளார் சச்சின். இதில் படுகாயமடைந்த வீணா கபூர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இறந்ததை உறுதி செய்த பின்னர் வீட்டில் இருந்து 90 கி.மீ தூரத்தில் இருக்கும் ஒரு காட்டின் அருகிலுள்ள ஆற்றில் வீணா கபூரின் உடலை வீசியுள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bollywood