பழம் பெரும் நடிகை சவுக்கார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்தவர்களை பாராட்டும் விதமாக மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. இதில் பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ போன்ற விருதுகளுக்கு பலர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது 2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் பத்மவிபூஷன் 4 பேருக்கும், பத்மபூஷன் 17 பேருக்கும், பத்மஸ்ரீ 107 பேருக்கும் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார் பழம் பெரும்
நடிகை சவுக்கார் ஜானகி. இவர் தமிழில் 1952-ஆம் ஆண்டு வெளியான வளையாபதி என்னும்
படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘பிஸ்கோத்’ என்ற
திரைப்படம் சவுகார் ஜானகியின் 400-வது படமாகும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.