ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரபல நடிகர் விக்ரம் கோகலே கவலைக்கிடம்.. கோமா நிலையில் வெண்டிலேட்டர் சிகிச்சை!

பிரபல நடிகர் விக்ரம் கோகலே கவலைக்கிடம்.. கோமா நிலையில் வெண்டிலேட்டர் சிகிச்சை!

நடிகர் விக்ரம் கோகலே

நடிகர் விக்ரம் கோகலே

மராத்தி திரைப்படம் Anumati-க்காக 2013ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Maharashtra, India

    மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகலே மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இவர் கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில் நடித்துள்ளார். 77 வயதான விக்ரம் கோகலே நவம்பர் 5ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்த போதிலும் விக்ரமின் இருதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை கோமா நிலைக்கு சென்ற விக்ரம் கோகலே, வென்டிலேட்டர் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், விக்ரம் கோகலே காலமானதாக நேற்று இரவு செய்திகள் பரவிய நிலையில், இதை அவரது மனைவி விருஷாலி மறுத்துள்ளார். அவரது உடல் நிலை குறித்த தகவல்களை மருத்துவமனை இன்று தெரிவிக்கும் என்றார்.விக்ரம் கோகலே பாரம்பரியமான சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது சந்திரகாந்த் கோகலேவும் மராத்தி நாடக நடிகராவார். இவரது கொள்ளுப்பாட்டி துர்காபாய் காமத் இந்தியாவின் முதல் பெண் சினிமா நடிகை ஆவார்.

    இதையும் படிங்க: 103 வயது சித்தியிடம் பேசி மகிழ்ந்த எஸ்.ஏ.சந்திர சேகர்!

    அதேபோல், இவரது பாட்டி கமலாபாய் கோகலே நாட்டின் முதல் பெண் குழந்தை நட்சத்திரமாவார். விக்ரம் கோகலே மராத்தி, இந்தி,தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி சினிமாக்களில் நடித்துள்ளார். மராத்தி திரைப்படம் Anumati-க்காக 2013ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். கமல்ஹாசன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ஹே ராம் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். இவர் உடல் நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என திரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பிரார்த்தனை செய்திகளை பதிவிட்டுவருகின்றனர்.

    Published by:Kannan V
    First published:

    Tags: Actor, Maharashtra, Marathi, Pune