Home /News /entertainment /

12 வருடங்களுக்கு பிறகு உங்களுடன் இணைவது மிக்க மகிழ்ச்சி அண்ணா - உதயநிதி குறித்து சிம்பு வெளியிட்ட ட்வீட்!

12 வருடங்களுக்கு பிறகு உங்களுடன் இணைவது மிக்க மகிழ்ச்சி அண்ணா - உதயநிதி குறித்து சிம்பு வெளியிட்ட ட்வீட்!

சிம்பு மற்றும் உதயநிதி ஸ்டாலின்

சிம்பு மற்றும் உதயநிதி ஸ்டாலின்

‘வெந்து தணிந்தது காடு’ படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    12 வருடங்களுக்கு பிறகு உங்களுடன் இணைவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் குறித்து சிம்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படம் திரைக்கு வருவதால் சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    வெந்து தணிந்தது காடு படத்தில், வெவ்வேறான கேரக்டர்களில் சிம்பு நடித்து இருக்கிறார்.  அவருக்கு ஜோடியாக நடிகை சிதி இத்னானி படத்தில் இடம் பெற்றுள்ளார்.

    Also read... எந்த படத்தை எடுத்தாலும் கலாய்க்கிறார்கள் - 2K கிட்ஸ்கள் குறித்து பேசிய சூரி!

    இந்த நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் அடுத்த படத்தை 'ரெட் ஜெயிண்ட் மூவிஸ்' நிறுவனம் வெளியிடவுள்ளது. இதற்கு நடிகர் சிம்பு, உதய நிதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில் "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்திற்குப் பின் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி" எனத் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Simbhu, Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி