1 கோடி பார்வையாளர்கள்.... உண்மையிலேயே வெறித்தனம்

வெறித்தனம் பாடல் யூடியூப்பில் வியூஸ், லைக்ஸ் என அனைத்திலும் சாதனை படைத்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது

1 கோடி பார்வையாளர்கள்.... உண்மையிலேயே வெறித்தனம்
வெறித்தனம்
  • News18
  • Last Updated: September 4, 2019, 12:27 PM IST
  • Share this:
பிகில் படத்தில் இருந்து வெளியான வெறித்தனம் பாடல் 1 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் விஜய் அப்பா - மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தீபாவளிக்கு வெளியாக இருக்கும் பிகில் படத்தின் போஸ்டர்கள், சிங்கப்பெண்ணே பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது.


இந்நிலையில் வெறித்தனம் பாடலை படக்குழு 2 நாட்களுக்கு முன் வெளியிட்டது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் முதன் முறையாக விஜய் பாடியுள்ளார் என்பதால் பாடல் மீதான எதிர்பார்பு அதிகமாக இருந்தது. சென்னை வட்டார மொழியில் விஜய் பாடியுள்ளது அவரது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் பாடல் வெளியானது முதலே யூடியூப்பில் சக்கைப்போடு போட்டு வருகிறது. வியூஸ், லைக்ஸ் என அனைத்திலும் சாதனை படைத்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது

தற்போது இந்த பாடல் 1 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இதுவரை 9,30,000 பேர் லைக் செய்துள்ளனர்.

Loading...




வெறித்தனம் பாடல் வீடியோ

First published: September 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...