ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிம்புவுக்கு 'காஸ்ட்லி’ காரை பரிசளித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.. விலை எவ்வளவு தெரியுமா?

சிம்புவுக்கு 'காஸ்ட்லி’ காரை பரிசளித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.. விலை எவ்வளவு தெரியுமா?

சிம்புவுக்கு கார் பரிசு

சிம்புவுக்கு கார் பரிசு

படம் வெளியான முதல் நாளிலேயே ரூ. 10.86 கோடி வசூலை ஈட்டியதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு காரையும், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு பைக்கையும் பரிசளித்துள்ளார்.

  கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், மலையாள நடிகர் சித்திக், அப்புக்குட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

  இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வெற்றிப் படமாக உருவெடுத்துள்ளது. படம் வெளியான முதல் நாளிலேயே ரூ. 10.86 கோடி வசூலை ஈட்டியதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். கூடுதலாக மதுஸ்ரீ பாடியுள்ள மல்லிப்பூ பாடல் பலரது ப்ளேலிஸ்டில் ரிப்பீட் மோடில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

  ALSO READ | தொடர்ந்து கிளாமர் படங்களை பதிவிட்டு வரும் ரம்யா பாண்டியன்..!

  இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் படத்தின் நடிகர் சிம்புவுக்கு ரூ.92 லட்சம் மதிப்புள்ள Toyota VellFire காரை பரிசாக அளித்துள்ளார்.

  மேலும் இப்படத்தை இயக்கிய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு பைக் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார். இந்த பைக்கில் தயாரிப்பாளரை கூட்டி கொண்டு இயக்குனர் கௌதம் மேனன் சுற்றி வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Gautham Vasudev Menon, Ishari K Ganesh, Royal enfield, Silambarasan