ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெண்ணிலா கபடிக் குழு படப் புகழ் மாயி சுந்தர் மரணம்!

வெண்ணிலா கபடிக் குழு படப் புகழ் மாயி சுந்தர் மரணம்!

மாயி சுந்தர்

மாயி சுந்தர்

திருமணம் செய்துக் கொள்ளாமல் தனியே வசித்து வந்த மாயி சுந்தர், இறுதியாக இயக்குநர் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ படத்தில் நடித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெண்ணிலா கபடிக்குழு திரைப்பட புகழ் நடிகர் 'மாயி' சுந்தர் இன்று அதிகாலை 2.45' மணிக்கு உடல்நிலை குறைவால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிக் குழு என்ற படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமானவர் நடிகர் மாயி சுந்தர்.

இவர் முன்னதாக மாயி, துள்ளாத மனமும் துள்ளும், குள்ளநரி கூட்டம், மிளகாய், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி, கட்சிக்காரன் என ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்ச காமாலை நோய்க்காக, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  இன்று அதிகாலை 2.45 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 50.

Also read... ரேங்கிங் டாஸ்க் என்பது கர்ச்சீப் போட்டு சீட் பிடிப்பது அல்ல - வெளியானது கமலின் அதிரடி ப்ரோமோ!

திருமணம் செய்துக் கொள்ளாமல் தனியே வசித்து வந்த மாயி சுந்தர், இறுதியாக இயக்குநர் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்த மற்றொரு நடிகர் ஹரி வைரவன் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment