வெங்கட்பிரபுவின் புதிய படம் - ஒரு நாயகன் மூன்று நாயகிகள்!

வெங்கட் பிரபு

ஸ்மிருத்தி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் என இதில் மூன்று நாயகிகள். விரைவில் இதன் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மாநாடு படத்தை முடித்த வெங்கட்பிரபு அடுத்தப் படத்தில் பிஸியாகிவிட்டார். இந்தமுறை அவர் இயக்கத்தில் நடித்திருப்பது அசோக் செல்வன். 

மங்காத்தா தவிர்த்துப் பார்த்தால், சின்ன நடிகர்களை வைத்து வெங்கட்பிரபு இயக்கிய படங்கள்தான் ஓடியிருக்கிறது, பெயரும் வாங்கித் தந்திருக்கிறது. மங்காத்தாவில்கூட, அஜித் ஆரம்பகால நடிகரைப் போல் எந்த இமேஜுக்குள்ளும் சிக்காமல்தான் நடித்தார். படத்தின் அதிபயங்கர வில்லனே அவர்தான்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாசு என்கிற மாசிலாமணி, பிரியாணி என தொடர் தோல்விகளுக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கிய படம் பார்ட்டி. படம் முடிந்து பல வருடங்களாகியும் இன்னும் வெளியாகவில்லை. அதனையடுத்து சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கியுள்ளார்

Also read... தமிழில் வெளியாகிறது டோண்ட் ப்ரீத் 2 - ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மாநாடு படத்தை தொடங்கும் முன்பே அசோக் செல்வன் நடிப்பில் ஒரு படத்தை வெங்கட்பிரபு திட்டமிட்டு வேலைகளை ஆரம்பித்திருந்தார். ஸ்மிருத்தி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் என இதில் மூன்று நாயகிகள். விரைவில் இதன் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதுபடப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்த நிலையில், அடுத்த மாதமே படம் திரைக்கு வரலாம் என்கிறார்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: