ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாக்யராஜ் பட பாதிப்பில் மன்மத லீலையை இயக்கும் வெங்கட் பிரபு!

பாக்யராஜ் பட பாதிப்பில் மன்மத லீலையை இயக்கும் வெங்கட் பிரபு!

மன்மத லீலை

மன்மத லீலை

பாக்யராஜின் சின்ன வீடு படத்தின் இன்ஸ்பிரேஷனில் மன்மத லீலை கதை எழுதப்பட்டிருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மாநாடு படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்துக்கு மன்மத லீலை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பெயர் மட்டுமில்லை, படத்தின் கதையும் பழைய படத்தின் இன்ஸ்பிரேஷனில் எழுதப்பட்டதே.

மன்மத லீலை ஒரு அடல்ட் காமெடி. கோவா படத்தில் இந்தவகை நகைச்சுவையை வெங்கட் பிரபு முற்சி செய்திருந்தார். திரையரங்கில் 20 சதவீதம் மட்டுமே கோவா நகைச்சுவைக்கு சிரித்தது. மன்மத லீலை அப்படி இருக்காது என்று நம்பலாம். ஏனெனில், பாக்யராஜின் சின்ன வீடு படத்தின் இன்ஸ்பிரேஷனில் மன்மத லீலை கதை எழுதப்பட்டிருக்கிறது. ஆம், திருமணமான நாயகனுக்கு வேறொரு பெண்ணிடம் வரும் காதல் (அல்லது காமம்)தான் படத்தின் கதை.

மன்மத லீலை படத்தின் கதையை வெங்கட் பிரபுவின் அசிஸ்டெண்ட் மணிவண்ணன் என்பவர் எழுதியிருக்கிறார். கதை பிடித்துப்போக அதனை டெவலப் செய்யச் சொல்லியிருக்கிறார் வெங்கட் பிரபு. கொரோனா லாக் டவுன் காலத்தில் அனைவரும் த்ரில்லர் கதை செய்ய, வித்தியாசமாக அடல்ட் காமெடியை கையிலெடுத்திருக்கிறார்கள். அதுதான் இப்போது படமாகப் போகிறது. முதல்முறையாக இன்னொருவர் கதையை வெங்கட் பிரபு இயக்கப் போகிறார். நாயகன் மாட்டிக் கொள்கிறானா இல்லையா என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.

மோடியை விமர்சித்த தனியார் தொலைக்காட்சி பொது மன்னிப்பு கோர வேண்டும் - பாஜக வலியுறுத்தல்

அசோக் செல்வன் ஒருவர் தான் நாயகன். ஆனால் மூன்று நாயகிகள். சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன். வெங்கட் பிரபுவின் படம் என்றால் சக்தி சரவணன் ஒளிப்பதிவு என்பது எழுதப்படாத விதி. இந்தப் படத்தில் அவருக்குப் பதில் அவரது அசிஸ்டெண்ட் தமிழ் ஏ அழகன் என்பவரை ஒளிப்பதிவாளராக்கியிருக்கிறார். அதேபோல் எடிட்டர் பிரவீணுக்குப் பதில் அவரது அசிஸ்டெண்ட் வெங்கட் ராஜனை எடிட்டராக்கியுள்ளார்.

பாஜக ஊடகங்களை மிரட்டலாம், ஆனால்... தனியார் சேனல் சர்ச்சை குறித்து ஜோதிமணி எம்.பி

தனது படத்துக்கு யுவன் இசையமைத்தால் பிரேம்ஜி அமரன் நடிப்பார், ஒருவேளை பிரேம்ஜி அமரன் இசையமைத்தால் அவர் படத்தில் நடிக்க மாட்டார் என வெங்கட் பிரபு முன்பே கூறியுள்ளார். இந்தப் படத்துக்கு அவரது தம்பி பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறார். அதாவது மன்மத லீலையில் பிரேம்ஜி நடிக்கப் போவதில்லை. குறுகியகால தயாரிப்பாக மன்மத லீலை தயாராகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Venkat Prabhu