ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெங்கட்பிரபு இயக்கப் போகும் ஹீரோ யார் தெரியுமா?

வெங்கட்பிரபு இயக்கப் போகும் ஹீரோ யார் தெரியுமா?

வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு

வெங்கட்பிரபு சுதீப்பை இயக்குவது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. ஆனால், அது அடுத்தப்படமா இல்லை அதற்கடுத்தப் படமா என்பது தெரியவில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மாநாடு படத்துக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கப் போகும் படம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. அதேநேரம், பிரபல கன்னட நடிகர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கயிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு வெங்கட்பிரபுவின் கிராஃப் உயர்ந்துள்ளது. அவரது இயக்கத்தில் நடிக்க வளர்ந்துவரும் நடிகர்கள் ஆவலாக உள்ளனர். சில மாதங்கள் முன்பு வெங்கட்பிரபு கன்னட நடிகர் கிச்சா சுதீப்பை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

அப்போது தனக்கு சுதீப் சமைத்துத் தந்ததாகவும், அவரது கவனிப்பு சிறப்பாக இருந்ததாகவும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, வெங்கட்பிரபு சுதீப் நடிக்கும் படத்தை இயக்குகிறார் என பேசப்பட்டது. வெங்கட்பிரபு மாநாடு படத்தில் சிம்புவுடன் இணைந்த பிறகு சுதீப்புடனான வெங்கட்பிரபுவின் சந்திப்பையே ரசிகர்கள் மறந்துவிட்டனர்.

இந்நிலையில், இணையத்தில் நடந்த ஒரு உரையாடலில் சுதீப் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கயிருப்பதாக தெரிவித்துள்ளார். "நான் நடிக்க விரும்பும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் கன்னடத்திலும் தென்னகத்தில் உள்ள பக்கத்து மாநிலங்களிலிருந்தும்தான் கிடைக்கின்றன. இந்தியில் இருந்து வரும் பெரும்பாலானவை வில்லன் கதாபாத்திரங்கள்.

உண்மையிலேயே சவாலான கதாபாத்திரங்களாக அவை இல்லாதபட்சத்தில் அந்த வேடங்களில் நடிக்க நான் விரும்புவதில்லை. இப்போது நாங்கள் எடுக்கிற படங்களே இந்தியில் வெளியாகின்றன. என்னுடைய அடுத்து வரும் படங்களில் ஒன்றை வெங்கட்பிரபு இயக்குகிறார். அவர் மங்காத்தா, மாநாடு படங்களை இயக்கியவர். அவர் சிறந்த அறிவாளி" என கூறியுள்ளார்.

Venkat Prabhu to direct Kiccha Sudeep in his next film, venkat prabhu next movie, venkat prabhu, director venkat prabhu, venkat prabhu tweet,  வெங்கட் பிரபு, இயக்குனர் வெங்கட் பிரபு, வெங்கட் பிரபு ட்வீட், venkat prabhu kiccha sudeep, kiccha sudeep movies, kiccha sudeep wife, kiccha sudeep age, kiccha sudeep twitter, kiccha sudeep instagram, kiccha sudeep daughter kiccha sudeep daughter age, கிச்சா சுதீப், கிச்சா சுதீப் படங்கள், கிச்சா சுதீப் வெங்கட் பிரபு

வெங்கட்பிரபு சுதீப்பை இயக்குவது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. ஆனால், அது அடுத்தப்படமா இல்லை அதற்கடுத்தப் படமா என்பது தெரியவில்லை. சுதீப் தற்போது தனது விக்ராந்த் ரோணா படத்தின் புரமோஷனில் பிஸியாக உள்ளார். இந்தப் படம் பிப்ரவரி 24 திரைக்கு வருகிறது. தமிழிலும் இந்தப் படம் வெளியாகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Shalini C
First published:

Tags: Venkat Prabhu