கரகாட்டக்காரன் வெளியாகி 31 ஆண்டுகள் நிறைவு - வெங்கட் பிரபு மகிழ்ச்சி

கரகாட்டக்காரன் திரைப்படம் வெளியாகி 31 ஆண்டுகளாகிவிட்டதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

கரகாட்டக்காரன் வெளியாகி 31 ஆண்டுகள் நிறைவு - வெங்கட் பிரபு மகிழ்ச்சி
கரகாட்டக்காரன்
  • Share this:
கங்கை அமரன் இயக்கத்தில் 1989-ம் ஆண்டு வெளியான படம் கரகாட்டக்காரன். ராமராஜன் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தில் கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கலக்கல் காமெடி, காதல் கதையம்சம் கொண்ட இத்திரைப்படம் வெளியான சமயத்தில் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பின.

இன்னும் இப்படடத்தின் காமெடி காட்சிகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி 31 ஆண்டுகளாகிவிட்டதாக இயக்குநர் கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதற்காக #31yearsofkaragattakaran என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியிருக்கும் வெங்கட் பிரபு, “நமக்கு பிடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 31 ஆண்டுகளாகின்றன. இந்தப் படத்தில் இசையும், காமெடியும் எளிமையாக கதை சொல்லும். இன்றும் இப்படத்தைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.




மேலும் படிக்க: சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணியில் சல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் இருப்பதாக பரபரப்பு வழக்கு
First published: June 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading