மாநாடு, மன்மத லீலை படங்களுக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் கஸ்டடி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்துக்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.
நாக சைதன்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க, அரவிந்த் சாமி, சரத்குமார், பிரியாமணி, பிரேம்ஜி, வெண்ணிலா கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற மே 12 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
இந்தப் படம் தமிழிலும் வெளியாகிறது. இந்த நிலையில் கஸ்டடி படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதாக வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவரது பதிவில், நாங்கள் படமாக்கியிருப்பதை உங்களுக்கு காட்ட ஆர்வமாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
That was on hellava ride brother!! Cant wait to show what we have done to ur fans and our audience!!! #excited #CustodyOnMay12 https://t.co/FoTgg8zNOZ
— venkat prabhu (@vp_offl) February 24, 2023
இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். கடைசியாக இருவரும் இணைந்து சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த மாமனிதன் படத்துக்கு இசையமைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Venkat Prabhu