’அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயல்படுவதை முதல்முறையாக பார்க்கிறேன்’ - வெங்கட் பிரபு!

’அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயல்படுவதை முதல்முறையாக பார்க்கிறேன்’ - வெங்கட் பிரபு!

வெங்கட் பிரபு

இந்த தொற்றுநோய் காலத்தில், நமது மக்களின் முன்னேற்றத்திற்காக அரசியல்வாதிகள் ட்விட்டரில் ஒன்றிணைந்து செயல்படுவதை முதல் முறையாக நான் காண்கிறேன்!

  • Share this:
    ’இந்த தொற்றுநோய் காலத்தில், நமது மக்களின் முன்னேற்றத்திற்காக அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயல்படுவதை ட்விட்டரில் முதல் முறையாக நான் காண்கிறேன்’ என இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்திருக்கும் திமுக-வுக்கும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் திரைப்பிரபலங்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

    தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைப்பெற்றது. இதில் திமுக - காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகளுடனும், அதிமுக - பாஜகவுடனும் களம் கண்டன. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் 159 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது திமுக. அதோடு 25 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. 50 வருடம் அரசியலில் இருந்தாலும், இப்போது தான் முதல் முறையாக அரியணை ஏறவிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதையடுத்து அவருக்கு தமிழ் சினிமா திரைப்பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அதற்கு மு.க.ஸ்டாலினும் ட்விட்டரில் தனது நன்றியை தெரிவித்து வருகிறார்.



    இந்நிலையில், ’எங்கள் மதிப்பிற்குரிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன. வாழ்த்துகளுக்கு அவர் பதிலளிப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்!! இந்த தொற்றுநோய் காலத்தில், நமது மக்களின் முன்னேற்றத்திற்காக அரசியல்வாதிகள் ட்விட்டரில் ஒன்றிணைந்து செயல்படுவதை முதல் முறையாக நான் காண்கிறேன்! இந்த நேர்மறை எப்போதும் இருக்கட்டும்!’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: