முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இது யுவனின் மேஜிக் - வீடியோ பகிர்ந்து வெங்கட் பிரபு நெகிழ்ச்சி

இது யுவனின் மேஜிக் - வீடியோ பகிர்ந்து வெங்கட் பிரபு நெகிழ்ச்சி

வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு

சரோஜா படத்தில் இடம்பெற்ற கோடான கோடி பாடலுக்கு பேருந்தில் கல்லூரி மாணவர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு, மன்மத லீலை படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதனையடுத்து தற்போது தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் கஸ்டடி படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. தற்போது இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க, அரவிந்த் சாமி இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். பொதுவாக வெங்கட் பிரபுவின் படப் பாடல்கள் எப்பொழுதும் பெரிய வெற்றியைப் பெறும். இந்தப் படத்தில் இளையராஜா - யுவன் இணைந்து இசையமைத்துள்ளதால் படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சரோஜா படத்தில் இடம்பெற்ற கோடான கோடி பாடலுக்கு பேருந்தில் கல்லூரி மாணவர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதனை ரசிகர் ஒருவர் பகிர்ந்து வெங்கட் பிரபுவை குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு வாவ், இது கண்டிப்பாக யுவனின் மேஜிக் மற்றும் நடன இயக்குநர் கல்யாண் மாஸ்டரின் நடன அமைப்பாலும் இந்தப் பாடல் டிரெண்டாகிவருகிறது. என்ஜாய் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Venkat Prabhu