ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு - துணிவு : எதுக்கு வம்பு? புரொஃபைல் பிக்சரை மாற்றிய வெங்கட் பிரபு

வாரிசு - துணிவு : எதுக்கு வம்பு? புரொஃபைல் பிக்சரை மாற்றிய வெங்கட் பிரபு

விஜய் - அஜித்

விஜய் - அஜித்

இல்லனா ஓடிடி இருக்கு. அதுல வந்து பாருங்க. யாரும் எதையும் தடுக்க முடியாது. ரெண்டு பேருக்கும் வெற்றி கிடைக்கணும், ரெண்டு படங்களுக்கும் லாபம் கிடைக்கணும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

வாரிசு படமும் துணிவு படமும் வருகிற 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் வீரமும் - ஜில்லா படமும் வெளியாகியிருந்தது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு இருவரது படங்களும் ஒன்றாக வெளியாகிறது. பொதுவாகவே இரு தரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வது வழக்கம். தற்போது அது இன்னும் உக்கிரமடைந்துள்ளது.

எந்த படத்தின் டிரெய்லர் அதிக வியூஸ்களைப் பெற்றிருக்கிறது என்பதிலிருந்து எந்தப் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு, மொத்த வசூல் எவ்வளவு என்பது வரை இந்த மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கும். எந்தப் படத் தயாரிப்பாளர்களும் தங்கள் படங்கள் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில்லை. சமூக வலைதளங்களில் தோராயமாக வெளியாகும் தகவல்களை வைத்தே இரு தரப்பு மோதிக்கொள்வது வழக்கமாகியுள்ளது. மற்றொரு பக்கம் இரு தரப்பு ரசிகர்களும் நடிகர்களின் தோற்றங்களை கலாய்க்கும் அளவுக்கு மோசமாக நடந்துகொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில் ரசிகர்கள் வாரிசா துணிவா என ரசிகர்கள் மோதிக்கொண்டிருக்க பிரபலங்கள் எதுக்கு வம்பு என அஜித் - விஜய் ஆகிய இரண்டு பேர் இருக்கும் படங்களை புரொஃபைல் பிக்சரை மாற்றியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக இயக்குநர் வெங்கட் பிரபு அஜித் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புரொஃபைல் பிக்சரை மாற்றியுள்ளார். இந்தப் படம் மங்காத்தா மற்றும் வேலாயுதம் படங்களின் படப்பிடிப்பு ஒரே அரங்கில் நடைபெற்றபோது விஜய், அஜித், வெங்கட் பிரபு, பிரேம்ஜி உள்ளிட்டோர் எடுத்துக்கொண்ட படம்.

இந்த நிலையில் துணிவு குறித்து சமீபத்தில் இயக்குநர் வினோத் அளித்த பேட்டி ஒன்றில் ரசிகர்களின் மோதல் போக்கு குறித்து பேசியுள்ளார். அதில், ''சிம்பிளா யோசிச்சோம்னா இரண்டு படங்கள் வருது. 5, 6 நாட்கள் விடுமுறை இருக்கிறது. குறைந்தது 2 வாரங்கள் அந்தப் படங்கள் ஓடப்போகுது. வேலைக்கு போய் சம்பாதிக்கிறவங்க, ரெண்டு படங்கள் பார்க்கணும்னு நினைக்கிறவங்க, தியேட்டர் போய் பார்க்கலாம். இல்ல ஒரு படம் தான் பார்க்கணும்னா பார்க்கலாம். இல்லனா ஓடிடி இருக்கு. அதுல வந்து பாருங்க. யாரும் எதையும் தடுக்க முடியாது. ரெண்டு பேருக்கும் வெற்றி கிடைக்கணும், ரெண்டு படங்களுக்கும் லாபம் கிடைக்கணும்’ என்று பேசியிருந்தார்.

First published:

Tags: Thunivu, Varisu