• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கணவன், மனைவியாக நடிக்கும் வெங்கட் பிரபு, சினேகா...!

கணவன், மனைவியாக நடிக்கும் வெங்கட் பிரபு, சினேகா...!

இயக்குனர் வெங்கட் பிரபுவும், நடிகை சினேகா

இயக்குனர் வெங்கட் பிரபுவும், நடிகை சினேகா

யூனிவர்ஷல் கிரியேஷனும், ட்ரைடன்ட் ஆர்ட்ஸும் இணைந்து படத்தை தயாரிக்கின்றன. ராஜேஷ் வைத்யா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கும் புதிய படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவும், நடிகை சினேகாவும் கணவன், மனைவியாக நடிக்கின்றனர்.

அருணாச்சலம் வைத்தியநாதன் என்றதும் யாரோ என நினைக்க வேண்டாம். அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதனே இப்போது அருணாச்சலம் வைத்தியநாதனாகியுள்ளார். இவரது அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடிப்பதற்காக யுஎஸ் சென்ற போதுதான் பிரசன்னாவுக்கும், சினேகாவுக்கும் காதல் ஏற்பட்டு, அது திருமணத்தில் முடிந்தது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அருணாச்சலம் வைத்தியநாதன் குழந்தைகளுக்கான சாட் பூட் 3 என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஒரு தம்பதி கதாபாத்திரங்கள் பிரதானமாக வருகிறது. சினேகாவிடம் கூறிய போது முதலில் மறுத்திருக்கிறார். பிறகு கதையை கேட்டதும் நானே செய்கிறேன் என்று நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அவரது கணவராக வெங்கட் பிரபு நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் யோகி பாபு.

Also read... இந்தோனேஷிய மொழியில் ரீமேக் செய்யப்படும் முதல் மலையாளப் படம்!

யூனிவர்ஷல் கிரியேஷனும், ட்ரைடன்ட் ஆர்ட்ஸும் இணைந்து படத்தை தயாரிக்கின்றன. ராஜேஷ் வைத்யா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: